ஆசிரியர்

"அகரத்தில்
ஆரம்பித்த
எனது
வாழ்க்கை பயணத்தை
வழிநெடுங்கிலும்
கூட்டிச்சென்றன
அகிம்சையை
போதித்த
உனது
போதனைகள்!
சமூகத்தில்
நான்
என
எண்ணியிருந்தேன்!
சமூகத்திற்காக
நான்
என
உணரவைத்தாய்!
உன்
சிந்தனைக்கீற்றை
உள்வாங்கிய
வேளையில்
என்னுள்ளே
சிறகுகள்
முளைத்தன
இவ்வுலகை
வலம்வர!
உமக்கு
ஆயிரத்தில்
ஒருத்தன்
நான்!
என்
ஆயுளுக்கும்
ஒருத்தன்
ஆசிரியராக
நீர்!-

எழுதியவர் : இராஜசேகர் (6-Sep-17, 9:21 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : aasiriyar
பார்வை : 68

மேலே