தவிக்கிறேன்
மணிக்கணக்கில்
மெய் மறந்து
பேசி கொண்டிருப்போம் ...
இன்று...
நம் காதலின் கடைசி நாள் ...
பேச வார்த்தைகள் அற்று
மௌனமாய்
என் அழுகையை அடக்கி
என் சிறு விசும்பல் மட்டுமே
எனக்காய் உன்னிடம் பேசியது ...
நான் பேச நினைத்தை
அது ,
உன்னிடம் பேசியதா?
என் ,
வலியை உணர்த்தியதா ?
புரியாமல் தவிக்கிறேன்,
உன்னை இழந்து....