அரசியல் அரசியல் அரசியல்

(நேரிசை ஆசிரியப் பா)
தரணியில் வீரத் திற்குத் தமிழராம்
பரணிபா டுகின்றார் பெருந்த லைகள்
உதாரணம் காட்டுவர் கணைக்கால் இரும்பொறை
உலகாண் டச்சோ ழர்கள் என்பர்
உச்சியி இமையக்கல் கொணர்ந்த சேரன்
பாண்டி நெடுஞ்செழி யன்வே ளிர்குல
பாரிகா ரிநள்ளிஆய் ஓரிஅ தியமான்
ஏழே ழுவள்ளல் முன்பின் கடையென
பாரில் வாய்ச்சவ டால்கள் பேசி
ஏற்றமுற் றுத்தேர் தலில்தலை வராவார்
எற்றமென் னகண்டார் எம்தமிழ் மக்கள்
அரசியல் அரசியல் அரசியல்
அகண்டத் திரையால் அரசைப் பிடித்ததே!

---ராஜப் பழம் நீ (1-Sep-2017)

எழுதியவர் : palanirajan (7-Sep-17, 11:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1071

மேலே