ஆசை

இன்னொரு ஜென்மம்
பிறக்க ஆசை....!

இப்பிறப்பில் கிடைத்த
பெற்றோரையே, அப்பிறப்பில்
அடைய ஆசை....!

எனதருமைப் பெற்றோருக்கு
பாசத்தை பங்கு கொள்ளாது
நான் மட்டும் பிறக்க ஆசை....!

தனது வாழ்நாளில் கண்டிராத
இன்பத்தை என் பெற்றோர்
என் மூலம் காண ஆசை....!

இதுவரை சான்றோர்
வகுத்திட்ட வரலாற்றை யாம் மாற்றியமைத்திட ஆசை....!

எம்முதியோர் மதிக்க நல்லதொரு
சரித்திரம் படைக்க ஆசை....!

இளமை காலம் முடியும் முன்
மனமுவந்து என் இன்னுயிர்
துறக்க ஆசை....!

என் உயிர்ப் பிரியும் அக்கணம்
எனை ஈன்ற இருவரிடமும்
ஐந்து நிமிடம் உரையாட ஆசை....!

நான் இறந்த மறுகணமே
எனதுயிர்ப் பிரிவை தாங்காது
என் பெற்றோர் துன்புறுவதை விட
என்னுடன் அமைதியை நாடி
வந்து விட ஆசை....!

இன்னொரு ஜென்மம்
பிறக்க ஆசை....!

எழுதியவர் : சௌந்தர் (9-Sep-17, 3:00 pm)
சேர்த்தது : சௌந்தர்
Tanglish : aasai
பார்வை : 1438

மேலே