நான் ஒரு பையித்தியம்

உன் அழுகையால் - நான்
அழுகிறேன்

உன் சிரிப்பால் - நான்
சிரிக்கிறேன்

உன் கோபத்தால் - நான்
உடைகிறேன்

உன் வருத்ததால் - நான்
சாகிறேன்

என் நண்பனை காதலில்லாமல்
காதலிக்கிறேன்

ஆதலால் நீ எனக்கிட்ட
புனைபெயர் பையித்தியம்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (10-Sep-17, 7:22 pm)
பார்வை : 324

மேலே