என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 31
"என்ன டி, இவ்ளோ சீக்கிரம் காலேஜ் ல இருந்து வந்துட்ட" என்றாள் புவனா.
"இல்லம்மா, காயத்ரிக்கு ரொம்ப பீவரா இருந்துது, அதான் கெளம்பி வந்துட்டோம், லஞ்சம் கஞ்சி வெச்சு தரியா மா" என்றாள் விஜி.
"சரி டி, என்ன பண்ணுது காயத்ரி," என்றாள் புவனா.
"இல்ல அம்மா, ரொம்ப டயர்டா இருக்கு, தெம்பே இல்ல, வாமிட் வருது" என்றாள் காயத்ரி.
"இன்னிக்குன்னு பாத்து அவ வீட்ல வேற யாரும் இல்ல, பெங்களூர் போயிருக்காங்க.நைட்டு இங்க தான் இருக்க போறா"என்றாள் விஜி.
"இருக்கட்டும் டி, காயத்ரி ரொம்ப முடிலன்னா சொல்லு, டாக்டர் கிட்ட போலாம்" என்றாள் புவனா.
"சரி அம்மா" என்றாள் காயத்ரி.
"பீரியட்ஸ் இல்ல இல்ல?" என்றாள் புவனா.
"இல்ல அம்மா, லாஸ்ட் வீக் தான் முடிஞ்சுது" என்றாள் காயத்ரி.
"நீ தூங்கு டி, விஜி, நீ பிரெஷ் ஆகு, நான் கஞ்சி வெச்சு தரேன்" என்றாள் புவனா.
காயத்ரி மெல்ல உறங்க முயற்சி செய்தாள்.
விஜி வீட்டில் உடுத்தும் உடைக்கு மாறி காயத்ரிக்கு குடிக்க கஞ்சியுடன் தனது அறைக்கு வந்தாள்.
"ஏய், நீ தூங்கலையா, எதை பத்தியும் நினைக்காத, பேசாம தூங்கு, எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம், வேணும்னா நாளைக்கும் லீவு போட்டுக்கலாம்," என்றாள் விஜி.
"இல்ல டி, எனக்கு ஒண்ணுமே புரியல.நான் ஏன் பொறந்தேன் னு தோணுது" என்றாள் காயத்ரி.
"சரி சரி...அம்மா கு தெரிஞ்சுட போகுது, இன்னும் கொஞ்ச நேரத்துல ரம்மி வந்துடுவா, உன் தம்பியும் வந்துடுவான், அவங்களுக்கு எல்லாம் தெரியவேணாம்" என்றாள் விஜி.
மெல்ல எழுந்து கஞ்சியை வாங்கி குடித்தாள் காயத்ரி.
"இரு, நான் பாராசிட்டமால் எடுத்துட்டு வரேன்" என்று கூறிவிட்டு சென்றாள் விஜி.
சைலென்டில் வைத்த்திருந்த காயத்ரியின் போன் வைப்ரேட் ஆகும் அதிர்வு சத்தம் அந்த அமைதியான அறையில் உணரமுடிந்தது. "என்ன காயத்ரி, லஞ்ச் முடிஞ்சுதா" முபாரக்கின் சிறிய மெசேஜ்.
மெசேஜை படித்துவிட்டு பதில் அளிக்காமல் உறங்கிவிட்டாள் காயத்ரி.
விஜி மெடிக்கல் சென்று வருவதற்குள் காயத்ரி உறங்கி இருக்கவே, தனது மொபைலை நோண்டத்தொடங்கினாள் விஜி.
அரைமணி நேரம் கழிந்திருக்கும், விஜியின் போனுக்கு செந்தில் கால் செய்தான்.
"ஹலோ, சொல்லுங்க சார்" என்றாள் விஜி.
"என்ன, ரெண்டு பேரும் ஆப்டர்நூன் அப்ஸ்காண்ட் ஆயிட்டிங்க, என்ன ஆச்சு" என்றான் செந்தில்.
"உங்களுக்கு தெரியாத சார், காயத்ரி இஸ் நாட் வெல்" என்றாள் விஜி.
"அப்டின்னு பொய் சொல்லிட்டு அன்னிக்கு ஒரு க்ரூப்பா விழுப்புரம் வந்தீங்களே அவனுங்க கூட சுத்த போய்ட்டிங்களா" என்றான் செந்தில்.
அப்போது தான் விஜி உணர்ந்தாள்.அன்று விழுப்புரத்தில் அவன் இவர்களை பார்த்துவிட்டான் என்று.
"சார், இல்ல சார், அது என்னோட பிரென்ட் தான், நான் தான் காயத்ரியை......" என்று விஜி சொல்வதற்குள் "காயத்ரி எங்க" என்றான் செந்தில்.
"தூங்கறா சார்" என்றாள் விஜி.
"சரி, நாளைக்கு....அவள் ஞாபகம் வெச்சுக்கட்டும்" என்று சொல்லிவிட்டு துண்டித்தான் செந்தில்.
அடுத்த நிமிடமே டேவிட்டின் மெசேஜ்.
"விஜி, ஐ லவ் யு" என்று.
விஜி சற்று நேரம் யோசித்தாள். அவளையும் மீறி அவளது மனம் ப்ரவீனுக்கு கால் செய்ய தூண்டியது.
"ஹலோ, பிரவீன்...எப்படி இருக்கீங்க" என்றாள் விஜி.
"நல்லா இருக்கேன் விஜி, என்ன, காலேஜ் லீவா?" என்றான் பிரவீன்.
"இல்ல, காயத்ரிக்கு பீவர், அதான் அவளை கூட்டிட்டு ஹாப் டே ல வந்துட்டேன்" என்றாள் விஜி.
"ஐயோ, என்ன ஆச்சு, ரொம்ப ஹெவி பீவரா?" என்றான் பிரவீன்.
"கொஞ்சம் ஹெவி தான், பட் தூங்கறா" என்றாள் விஜி.
"சடனா இப்டி பீவர் வந்தா, பி.பி. இருக்கும், எதையாவது பாத்து பயந்துருப்பாங்க, ஏதாவது பிரச்சனையா, டென்க்ஷனா?" என்றான் பிரவீன்.
"ஆமாம்" என்று கல்லூரியில் நடந்ததை சொன்னாள் விஜி.
"என்ன சொல்றீங்க விஜி, இதை முபாரக் கிட்ட சொன்னீங்களா" என்றான் பிரவீன்.
"இல்ல, எங்க ப்ராபளம் நாங்களே பாத்துக்கற்றோம், அன்னிக்கு நம்மள விழுப்புரத்துல அவன் பாத்துருக்கான், அதான் இன்னிக்கு இப்டி பிஹேவ் பண்ணிருக்கான், விடுங்க, நாங்க பாத்துக்கறோம்" என்றாள் விஜி.
"என்ன விஜி, நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசறீங்க" என்றான் பிரவீன்.
"வேற என்ன பண்ண சொல்றீங்க, நீங்க யாரு எங்களுக்கு ஹெல்ப் பண்ண, உங்களால தான் இவ்ளோ ப்ராப்ளேமும் வந்துருக்குன்னு நான் நினைக்கறேன், நீங்க இன்னும் இன்னும்.....நீங்க ஒண்ணும் பண்ணவேணாம்" என்று கோபமாக சொன்னாள் விஜி.
"அதுக்கு ஏன் இப்டி கோவமா பேசறீங்க விஜி, சரி விடுங்க, நான் அப்புறம் பேசறேன்" என்றான் பிரவீன்.
"பேசவேணாம், இனிமே எங்களுக்கு நீங்களோ உங்க பிரெண்ட்ஸோ யாரும் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் விஜி.
"விஜி....என்ன சொல்றீங்க, கோவத்துல ஏதேதோ பேசறீங்க" என்றான் பிரவீன்.
"இல்ல, நான் கோவத்துல இருக்கேன் பட் உண்மையா தான் சொல்றேன், இனிமே எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, ப்ளீஸ், பை" என்று சொல்லிவிட்டு உடனே இணைப்பை துண்டித்தாள்.
சற்று நேரம் எந்த சப்தமும் இல்லை.
"சாரி விஜி, உங்க சந்தோசம் தான் எங்க எல்லாருக்கும் முக்கியம், எங்களால நீங்க சந்தோஷமா இல்லன்னு நீங்களே சொல்லும்போது...கண்டிப்பா இனிமே உங்கள நாங்க தொந்தரவு பண்ண மாட்டோம், நீங்க யார்கிட்டயும் சொல்லி காயப்படுத்தாதிங்க, யாரும் உங்கள தப்ப நெனச்சுர கூடாது. நான் சொல்லி நான் எல்லா பழியும் ஏத்துக்கறேன்" என்று மெசேஜ் அனுப்பினான் பிரவீன்.
"தப்பு பண்ணிவிட்டோமோ" என்று விஜியின் மனது ஒருபுறம் சொன்னாலும் மறுபுறம் காயத்ரிக்காக தான் செய்தது சரி தான் என்றது.
அதன்பிறகு சற்று நேரத்தில் "பெரிய தியாகி மாதிரி பேசவேணாம், டோன்ட் ஓவர் ஆக்ட்" என்று பதில் அளித்தாள் விஜி.
அதன்பின் மெஸேஜோ காலோ இல்லை. யாரிடம் இருந்தும் எந்த காலும் மெசேஜும் இல்லை. அனால் டேவிட் மட்டும் மீண்டும் ஒருமுறை காதல் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
இரவு ஏழு மணி ஆனது.
காயத்ரி மெல்ல எழுந்தாள்.அங்கே ரம்யாவும் காயத்ரியின் தம்பியும் படித்துக்கொண்டிருந்தான். விஜி காயத்ரியின் அருகே உட்கார்ந்து தனது வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
காயத்ரியிடம் நடந்தது எதுவும் கூறாமல் அவளுக்கு இரவு உணவாக இட்லி கொடுத்து உறங்கவைத்தாள்.
"என்னடி யாரும் எனக்கு மெசேஜ் பண்ணல, காலும் பண்ணல, ஆப்டேர்நூன் சாப்டியா னு முபாரக் அண்ணா மெசேஜ் பண்ணாங்க, நான் டயர்டுல மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணல, அதுக்கப்புறம் ஏதும் மெசேஜ் வரல" என்றாள் காயத்ரி.
"மே பி பிசியா இருப்பாங்க டி" என்றாள் காயத்ரி.
"சரி" என்றபடி ரியாஸ் விஜய் பிரவீன் முபாரக் நால்வருக்கும் "ஹாய் அண்ணா, குட் ஈவினிங்" என்று மெசேஜ் போட்டாள் காயத்ரி.
எந்த பதிலும் இல்லை, "ஏதோ பிரச்சனை போல டி, யாரும் ரிப்ளை பண்ணல, லெட் மீ கால் முபாரக் அண்ணா" என்றாள் காயத்ரி.
"வேணாம் டி, விடு, அவங்க தான் ரிப்ளை பண்ணல இல்ல, நீ முக்கியம் னு நெனச்சா மெசேஜ் பண்ணிருப்பாங்க இல்ல, இப்போ எதுக்கு கால் பண்ற" என்றாள் விஜி.
"ஏன், நான் ஏன் கால் பண்ண கூடாது" என்றாள் காயத்ரி.
"வேணாம் ந வேணாம், விடு, பேசாம தூங்கு" என்றாள் விஜி.
"இல்ல, நான் முபாரக் அண்ணா கிட்ட பேசணும்" என்றாள் காயத்ரி.
"நீ பேசினாலும் அவங்க யாரும் இனிமே உன்கூட பேச மாட்டாங்க" என்றாள் விஜி.
"ஏன்" என்றாள் காயத்ரி.
"நான் தான் சொன்னேன்" என்று நடந்தவற்றை காயத்ரியிடம் கூறினாள் விஜி.
"என்ன விஜி இப்டி பண்ணிட்ட, நீ ஏன் இப்டி சொன்ன, பாவம் அவங்க மனசு என்ன பாடு பட்டிருக்கும்" என்றாள் காயத்ரி.
"அவங்களால தான் டி உனக்கு இன்னிக்கு இந்த நெலம" என்றாள் விஜி.
"யாரு சொன்னா, அவங்க பாவம், நம்மள எவ்ளோ பெஸ்ட் பிரெண்டா நினைக்கிறாங்க, இப்டி பண்ணிட்டியே டி, உனக்கும் அந்த டேவிடுக்கும் பெரிய வித்யாசம் இல்ல" என்றாள் காயத்ரி சற்று கோபமாக.
"ஆமாம் டி, உனக்காக பேசினேன் பாரு, எனக்கு இது வேணும்" விஜியும் சத்தமாக பேசினாள்.
"விஜி நமக்குள்ள எதுக்கு ஆர்குமென்ட், நான் முபாரக் அண்ணா கிட்ட பேசணும், ப்ளீஸ்" என்றபடி முபாரக்கிற்கு கால் செய்தாள் காயத்ரி.
"ஹலோ, அண்ணா நான் காயத்ரி பேசறேன்" என்றாள்.
"ஹே....நான் நர்கீஸ் பேசறேன், முபாரக் போன் என்கிட்டே இருக்கு, அவன் எங்கயோ லாங் ஜர்னி போறேன், நைட் நோ ரிட்டர்ன், நாளைக்கு மத்தியானம் தான் விழுப்புரம் ரிட்டர்ன் னு சொல்லிட்டு ஆப்டேர்நூனே கெளம்பிட்டான். அவன் தான் அடிக்கடி உனக்கு போன் பண்ணி சாப்டியா ஹெல்த் எப்படி இருக்கு னு கெடுக்க சொன்னான், நான் உனக்கு மெசேஜ் பண்ணேன், பட் நீ ரிப்ளை தரல" என்றாள் நர்கீஸ்.
"ஓ நர்கீஸ் அக்காவா. எங்க போயிருக்காரு னு தெரியுமா, " என்றாள் காயத்ரி.
"இல்ல டா காயத்ரி, ரொம்ப கோவமா இருந்தான், அதான் கேட்டா கோவப்படுவான், கார் ல ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் தான் என்கூட பேசிட்டு இருந்தான் உடனே கெளம்பிட்டான்" என்றாள் நர்கீஸ்.
"கூட யாரவது போறாங்களா" என்றாள் காயத்ரி.
"ஆமாம், ரகு அண்ட் விஜய்" என்றாள் நர்கீஸ்.
"ஓகே அக்கா" என்று சொல்லி கட் செய்துவிட்டு விஜய்க்கு போன் செய்தாள் காயத்ரி.
"ஹலோ விஜய் அண்ணா," என்றாள் காயத்ரி.
"ஹலோ அக்கா, நான் கார்த்திக் பேசறேன், விஜய் இல்லையே, அவன் முபாரக் அண்ணா கூட வெளில போயிருக்கான், நாளைக்கு நைட் தான் வருவானாம், ஏதாவது முக்கியமான விஷயமா" என்றான் விஜய்யின் தம்பி கார்த்திக்.
"இல்ல டா, ஜஸ்ட் கால் பண்ணேன் அவ்ளோதான்" என்றாள் காயத்ரி.
கடைசி ஹோப், ரகுவுக்கு போன் செய்து "ஹலோ ரகு அண்ணா, நான் காயத்ரி பேசறேன்" என்றாள் காயத்ரி.
"ஹலோ, காயத்ரியா, நான் ரகு சிஸ்டர் பேசறேன், அண்ணன் முபாரக் அண்ணன் கூட வெளியூர் போயிருக்கு, நானும் என் அக்காவும் இன்னிக்கு எம்.என்.டீ.என் ஆஷ்ரம் ல தங்கி இருக்கோம், ஏதாவது விஷயமா?" என்றாள் ரகுவின் தங்கை.
"ஏய், விஜி, யாருமே அவங்கவங்க வீட்லே இல்ல, அவங்க போனும் எடுத்துட்டு போகாம போயிருக்காங்க,ரகு அண்ணா முபாரக் அண்ணா விஜய் அண்ணா மூணு பேரும் எங்கயோ வெளியூர் போறேன் னு சொல்லிட்டு போயிருக்காங்க, லெட் மீ கால் பிரவீன் ஆர் ரியாஸ் அண்ணா" என்றபடி ப்ரவீனுக்கு போன் செய்தாள் காயத்ரி. ஸ்விச் ஆப். ரியாஸுக்கு போன் செய்தாள், "அக்கா, நான் ஷாகுல் பேசறேன், அண்ணன் லைன் கு போயிருக்கு" என்ற பதில் சாகுலிடம் இருந்து.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
விஜி தான் தவறு செய்து விட்டோமோ, யாருக்கு என்ன ஆச்சோ என்று மிகவும் கவலையில் இருந்தாள்.
சற்று நேரத்தில் இருவரும் உறங்கி விட்டனர்.
பொழுது விடிந்தது. கல்லூரிக்கு செல்லலாமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் காயத்ரி இருந்தாள்.ப்ரவீனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஆச்சோ என்ற கவலை வேறு, அந்நேரம் தனது தந்தையிடம் இருந்து போன்,"என்னம்மா காயு, எப்படி இருக்க, என்ன பண்றீங்க, காலேஜ் கெளம்பியாச்சா, " என்றார் காயத்ரியின் தந்தை.
"கிளம்பிட்டேன் பா, " என்றாள் காயத்ரி.
காலேஜ் வாசலில் டேவிட் வழக்கம் போல் நின்றிருந்தான், விஜியை பார்த்து ஒரு சிரிப்பு மட்டும், மொபைல் வழியாக ஒரு ஐ லவ் யு மெசேஜ். விஜி அதை பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. அவள் மனம் ஒருபுறம் பிரவீன் அண்ட் டீம் பற்றி மறுபுறம் இன்று காயத்ரியின் நிலைமை பற்றி.
கல்லூரி தொடங்கி முதல் பாட வேலை முடிந்தது. இரண்டாவது பாடவேளை. செந்திலின் வகுப்பு. அனால் செந்தில் கல்லூரிக்கு வரவில்லை. அவனுக்கு பதில் மாற்று பயிற்சியாளர் ஒருவர் வந்திருந்தார். "செந்தில் சார், ஹாப் டே லீவ் ல போயிருக்காரு, அவங்க பேமிலி பிக்கப் பண்ண" என்று சொன்னார் அவர்.
"விஜி, அப்டின்னா, மதியம் ஒரு அவர் அவனோட க்ளாஸ் இருக்கு, அப்போ வருவானா டி" என்றாள் காயத்ரி.
"ஆமாம் போல இருக்கு டி" என்றாள் விஜி.
சாப்பாடு நேரத்திலும் அனைவருக்கும் மெசேஜ் கால் செய்து பார்த்தால் காயத்ரி.யாரும் இன்னும் வரவில்லை என்ற பதில் தான் கிடைத்தது.
"நம்மள மதிச்சவங்கள இப்படியா விஜி பண்ணுவ நீ" என்று கோவித்துக்கொண்டாள் காயத்ரி.
அமைதியாய் இருந்தாள் விஜி.
மதிய வகுப்புகள் ஆரம்பமானது.
நினைத்தது போலவே செந்தில் வந்திருந்தான்.
"காயத்ரி அண்ட் விஜி, நீங்க லெப் ல வெய்ட் பண்ணுங்க, உங்க ரிக்கார்ட் நோட் எடுத்துட்டு போங்க" என்றான் செந்தில்.
காயத்ரிக்கு அழுகையே வந்துவிட்டது.
கால் மணி நேர காத்திருப்புக்கு பின் உள்ளே வந்தான் செந்தில்.
"காயத்ரி, ஹெல்த் எப்படி இருக்கு" என்றான் செந்தில்.
"இன்னும் பீவர் இருக்கு சார்" என்றாள் காயத்ரி.
"காயத்ரி, நான் பண்ணது எல்லாம் தப்பு, ஒரு லெக்ச்சர்ரா என்னோட செயல் ரொம்ப கேவலமானது, நீ என்னை மன்னிச்சுரு, என்னால இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் வராது, நான் நல்லா யோசிச்சு பாத்தேன், நான் உன்னை ரொம்ப மனசாலவுல ஹர்ட் பண்ணிட்டேன், சாரி, இன்னொரு விஷயம், இனிமே என்னால உனக்கு எந்த ப்ராப்ளேமும் இல்ல, உனக்கு மெசேஜ் அனுப்பி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், அது மட்டும் இல்ல, என்னோட பெமிலி வரல, அதுக்கு பதில் நான் கிளம்பறேன், எனக்கு சொந்த ஊர்லயே போஸ்டிங் கெடச்சுருக்கு, இன்னும் ஒன் வீக் ல கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டான் செந்தில்.
விஜிக்கும் காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மனதுக்குள் பெரிய சந்தோசம். என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக்கொண்டனர்.
காயத்ரியின் ஜுரம் சரியாய் போய் இருந்தது.
"நல்ல வேளை அந்த நாய் கு சொந்த ஊர்ல வேலை கெடச்சதுனால இங்க இருந்து போகுது, வேலை கொடுத்த அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும், சனியன் விட்டு தொலஞ்சுது" என்றாள் விஜி.
பகுதி 31 முடிந்தது.
-------------தொடரும்---------------