என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 32
"என்னால நம்பவே முடில விஜி, எவ்ளோ பயந்துகிட்டே வந்தேன் தெரியுமா, " என்றாள் காயத்ரி.
"எனக்கும் தான் டி, இன்னிக்கு உன்னோட நெலமை என்ன ன்னு நெனச்சுட்டே தான் வந்தேன்." என்றாள் விஜி.
"விஜி, எனக்கு மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இன்னிக்கு ஏதாவது அட்வெர்ஸா நடந்திருந்தா கண்டிப்பா நான் செத்துருப்பேன் டி" என்று சொல்லி விஜியின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டாள் காயத்ரி.
"சரி விடு, போகும்போது கோவிலுக்கு போயிட்டு போகலாம்" என்றாள் விஜி.
அன்றைய தினம் போனதே தெரியவில்லை. மாலை கல்லூரி முடிந்து இருவரும் மிக சந்தோஷமாக பேருந்துக்கு நின்றிருந்தனர், எதிர் திசையில் மதினா பேருந்து பாண்டிச்சேரியை நோக்கி வந்தது, உள்ளிருந்து கண்டக்டர், "என்ன மேடம், உடம்பு சரி ஆயிருச்சா" என்று கேட்டான்.
காயத்ரியும் மிக சந்தோசஷமாக "ஆயிருச்சு அண்ணா" என்றாள்.
"சரி...இனிமேலாச்சும் உடம்ப பாத்துக்கோங்க, உடம்பு தான் நம்ம சொத்து, நம்ம ஹெல்த் ரொம்ப முக்கியம் மேடம், அக்கா, உனக்கும் தான்" என்று சொன்னபடி, "போலாம் ரெய்ட் ரெய்ட்" என்றபடி பேருந்தை முன்னரே செய்தான் கண்டக்டர்.
வளவனூர் செல்லும் ஜே.வி.எஸ். பேருந்து வந்தது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
அன்று மாலை எந்த படிப்பும் இல்லை, எந்த வேலையும் இல்லை, இருவரும் தங்களின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வளவனூரில் இருந்து சிறுவந்தாடு வரை சென்றுவிட்டு வந்தனர். காயத்ரிக்கு ஒரே ஒரு விஷயம் தான் உறுத்தியது, முபாரக் பிரவீன் யாரும் பேசவில்லை என்பது தான். இவளும் பேச தயங்கினாள். ஏனென்றால் விஜிக்கு அது பிடிக்கவில்லை. அவர்களும் என்ன காரணத்துக்காக பேசாமல் இருக்கிறார்கள் என்பது புரியவேயில்லை.ஒரு விஷயம் மட்டும், விஜியின் கோபமான பேச்சு தான் அவர்களை மௌனமாக்கி இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் விஜியின் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.
இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. கல்லூரியில் செந்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் தனது வலைகளை செய்து கொண்டிருந்தான், விஜியும் காயத்ரியும் நிம்மதியாக இருந்தனர். ஒரு சின்ன விஷயம் தான், டேவிட்டின் காதல் தொல்லை விஜிக்கு, ஆனால் அதை ஒரு பொருட்டாகவே அவள் கருதவில்லை.செந்தில் இன்னும் ஒரு வாரத்தில் போகிறான் என்ற செய்தி அவர்களுக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுத்தது.
சனிக்கிழமை.....விஜி ரம்யா இருவரும் கடலூர் செல்வதாய் திட்டம், காயத்ரியிடம் வெள்ளி காலையிலேயே சொல்லிவிட்டாள் விஜி. வெள்ளிக்கிழமை மாலை கடலூர் செல்லும் கணேசன் பேருந்தில் பயணிக்க போவதாக சொல்லி இருந்தாள் விஜி.காயத்ரிக்கு "பிரவீன் கிட்ட சொல்லிட்டியா கடலூர் வரேன் னு" என்று கேட்க ஆசை தான். விஜியின் கோப குணம் அவளை கேட்க தடையாய் இருந்தது.
விஜி ரம்யா இருவரும் கிளம்பி சென்றனர்.
"அக்கா, நாம வரோம் னு பிரவீன் கிட்ட சொல்லிட்டியா" என்றாள் ரம்யா. விஜி மௌனமாய் இருந்தாள்.
"அக்கா உன்னைத்தான் கேக்கறேன், பிரவீன் கிட்ட சொல்லிட்டியா?" என்றாள் ரம்யா.
"ரம்மி, மூடிட்டு வரியா, யாரு பிரவீன், நாம எதுக்கு அவன் கிட்ட சொல்லணும், தேவை இல்லாம இனிமே பிரவீன் கிரவீன் னு பேசிட்டு வராத" என்றாள் விஜி.
"இப்போ எதுக்கு தேவை இல்லாம கோவப்படற, என்ன பிரச்சனை உனக்கு" என்றாள் ரம்யா.
"ரம்மி, பேசாம வா," என்றபடி சீட்டில் சாய்ந்து கண்களை மூடி தூங்கப்போவதால சமிக்ஞயை செய்ய தொடங்கினாள் விஜி.
கடலூரை அடைந்ததும் கூட பிரவீன் முபாரக் யாருடனும் விஜி தொடர்பு கொள்ளாதது ரம்யாவுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. கேட்கவும் பயம்.
காயத்ரி போன் செய்தாள். நேரில் இல்லாத தைரியம்,"விஜி என்ன பிரவீன் கிட்ட முபாரக் அன்னான் கிட்ட யார் கிட்டயாவது பேசினியா" என்றாள் காயத்ரி.
"காயத்ரி....உன்கிட்ட நான் பலவாட்டி சொல்லிட்டேன், இனிமே அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, உன்னை நான் கம்பெல் பண்ணல, நீ தாராளமா அவங்க கூட எல்லாம் பேசலாம் பழகலாம், நான் உன்னை தடுக்கல, இது உன்னோட உரிமை, ஆனா அவங்ககூட நீ பழகணும்னா என்னை விட்டுடு, என்கூட பேசவேணாம்" என்றாள் விஜி.
"விஜி, எனக்கு நீ தான் முக்கியம், நீ தான் டி என்னோட பெஸ்ட் பிரென்ட், உன்னை கோபப்படுத்தி இருந்தா சாரி" என்றாள் காயத்ரி.
"இட்ஸ் ஓகே, நாளைக்கு பேசறேன்" என்றபடி போனை கட் செய்தாள் விஜி.
இது அனைத்துமே ரம்யாவுக்கு புதியதாய் இருந்தது.
"அக்கா, நீ கோவக்காரி தான், ஆனா பிரவீன் என்ன தப்பு பண்ணினான் னு இப்டி அவங்கள கம்ப்ளீட்டா நீ ஓமிட் பண்ண என்ன காரணம்" என்றாள் ரம்யா.
"இப்போ நீ சும்மா இருக்கியா இல்லையா ரம்மி?" என்றாள் விஜி.
"நீ என்கிட்டே ஒண்ணும் சத்தம் போடாத அக்கா, எனக்கு என்ன காரணம் னு சொல்லு, அவங்கள நீ ஏன் இப்டி ஓமிட் பண்ணி வெக்கற, அவங்க பாவம் எவ்ளோ பீல் பண்ணுவாங்க" என்றாள் ரம்யா.
"ரம்மி, பசங்கள பத்தி உனக்கு தெரியாது, பின்னாடி தெரிஞ்சுக்குவ, அதுவரைக்கும் நான் தப்பு பண்ணதாவே இருக்கட்டும், எனக்கு அவங்கள புடிக்கல, அவங்க யாரு நம்ம லைப் ல, நமக்கு ஹெல்ப் பண்ண அவங்க யாரு, நமக்கு அம்மா அப்பா சொந்தம் எல்லாரும் இருக்காங்க, மத்தவங்க எதுக்கு நமக்கு ரம்மி" என்றாள் விஜி.
"அக்கா, நமக்கு அம்மா அப்பா இருக்காங்க, எல்லாரும் இருக்காங்க, பிரவீன் அனாதை அக்கா, அவனுக்கு யாரும் இல்ல, நாமளும் அவனை கஷ்டப்படுத்தலாமா? இப்போ நீ சொன்னதோடு அர்த்தம் என்ன" என்றாள் ரம்யா.
"நான் சொன்னதோடு அர்த்தம் இப்போ நீ வாய மூடரியா இல்லன்னா பளார் னு ஒண்ணு இழுக்கவான்னு அர்த்தம்" என்றாள் விஜி.
"உன்னோட கோவத்தாலயும் உன்னோட இந்த அடமென்ட் பிஹேவியராலயும் ஒருநாள் நீ பெரிய இழப்பை பாக்கதான் போற அக்கா, உன்னோட இந்த இம்மிடியட் டெசிஷன் மேக்கிங், சரியா தப்பான்னு யோசிக்காம மத்தவங்கள பத்தி யோசிக்காம நீ செய்யறது எல்லாம் தான் சரின்னு பண்ற பாரு, அது உன்னை பெரிய கஷ்டத்துல கொண்டுபோய் விடும் அக்கா, அன்னிக்கு உனக்கு யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க, ஆனா அந்த இழப்பு உன்னை வாட்டி வதைக்கும், உன்கூட யாரும் இல்லாம தனியா ஆய்டுவ அக்கா, புரிஞ்சுக்கோ...அப்போ நீ மன்னிப்பு கேட்டாலும் அதி கேக்க யாரும் இருக்க மாட்டாங்க, கேட்டாலும் உன்னை புரிஞ்சுக்கற நெலமை ல இருக்க மாட்டாங்க. மனசுல இருக்கறத வெளிப்படையா பேசுக்கா, உனக்குள்ளயே வெச்சுகிட்டு நீ என்ன நெனைக்கிறியோ அதை செஞ்சுகிட்டு அது சரியா தப்பான்னு யோசிக்காம இப்டி இருக்காத, நீ என்னை விட பெரியவ தான் ஆனா நீ பண்றது தப்புன்னு உனக்கு தோணலயா அக்கா??" என்றாள் ரம்யா.
"ரம்மி, ஓங்கி ஒண்ணு விட்டேன் னா கன்னம் வீங்கிடும், போ போய் வேற வேலைய பாரு" என்றாள் விஜி.
"என்னமோ பண்ணு அக்கா, ஆனா ஒரு விஷயம், கண்டிப்பா ஒருநாள் நீ உணருவ" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் ரம்யா.
காயத்ரி சற்றே ஆழ்ந்து சிந்தித்து பார்த்துவிட்டு "சரி, ஒரே ஒரு முறை முபாரக் அல்லது பிரவீன் இருவரில் ஒருவர்க்கு கால் செய்து சொல்லி விடவேண்டும், செந்தில் மாற்றத்தை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று விரும்பினாள் காயத்ரி. ஆனால் விஜி என்ன நினைப்பாளோ என்ற பயம் வேறு.
இறுதியாக நர்கீஸுக்கு கால் செய்தாள் காயத்ரி.
"சொல்லு காயத்ரி, எப்படி இருக்க" என்று கேட்டாள் நர்கீஸ்.
"நல்லா இருக்கேன் அக்கா, முபாரக் அண்ணா எப்படி இருக்காரு தெரியுமா, " என்றாள் காயத்ரி.
"அதை நீ அவன்கிட்டயே போன் பண்ணி கேட்கலாமே" என்றாள் நர்கீஸ்.
"இல்ல அக்கா, அது வந்து......" இழுத்தாள் காயத்ரி.
"என்ன ஆச்சு காயத்ரி...ஏதாவது பிரச்சனையா" என்றாள் நர்கீஸ்.
"ஆமாம் அக்கா, அது...." என்று சொல்லமுடியாமல் தவித்தாள் காயத்ரி.
"என்னன்னு சொல்லு, தைரியமா சொல்லு" என்றாள் நர்கீஸ்.
"இல்ல அக்கா, ஒண்ணும் இல்ல, நான் அப்புறமா முபாரக் அண்ணன் கிட்ட பேசறேன், மே பி அண்ணன் பிசியா இருப்பாரு," என்றாள் காயத்ரி.
"என்ன பிசியா இருப்பான்?தோ எனக்கு முன்னாடி உக்காந்துகிட்டு ப்ரவீனுக்கு போன் பண்ணிட்டு இருக்கான், போனை தரவா அவன்கிட்ட" என்றாள் நர்கீஸ்.
"அக்கா, நிஜமா அண்ணன் உங்ககூட தான் இருக்காரா" என்றாள் காயத்ரி.
"ஆமாம், ஏன், நீ வரியா வந்து மீட் பண்ணு, டின்னை சாப்பிட்டு போலாம், வரியா" என்றாள் நர்கீஸ்.
"வரணும்...பாக்கணும் போல தான் இருக்கு, ஆனா எப்படி அக்கா, வீட்ல தம்பி மட்டும் தனியா இருப்பான்,இந்த நேரத்துல எப்படி கெளம்பி வர்றது" என்றாள் காயத்ரி.
"ஏன் வீட்ல யாரும் இல்லையா" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, எல்லாரும் பெங்களூர் போயிருக்காங்க, நாளைக்கு தான் வராங்க" என்றாள் காயத்ரி.
" ஓ, அப்படியா, நீ ஒண்ணும் பயப்படாத, தம்பியும் கூட்டிட்டு வா, வீட்லயும் தான் யாரும் இல்லையே, டின்னர் சாப்பிட்டு நைட் இப் யு டோன்ட் மைண்ட், எங்க வீட்ல தங்கிட்டு காலை ல போகலாம்" என்றாள் நர்கீஸ்.
"ஓகே கா, பட் பஸ் ல வரத்துக்கு லேட் ஆகும், நீங்க எங்க இருக்கீங்க இப்போ" என்றாள் காயத்ரி.
"நீ ஒண்ணு பண்ணு, பிரவீன் கு கால் பண்ணு, அவன் முபாறக்கொடை கார் எடுத்துட்டு வந்துட்டு இருக்கான், அவனை அப்டியே உன்ன பிக்கப் பண்ண சொல்லு, " என்றாள் நர்கீஸ்.
"அக்கா, அது...அது.....வேணாம் அக்கா, நான் பஸ் ல வரேன்" என்றாள் காயத்ரி.
"ஏய், என்ன, என்ன ஆச்சு, ஏன் பஸ் ல வர, அவன்கிட்ட பேசு, கோஆர்டினேட் பண்ணிக்கோ" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, வேணாம்" என்றாள் காயத்ரி. சொல்ல முடியாமல் தவித்தாள்.
"உனக்கு சங்கோஜமா இருந்தா விடு, நான் சொல்றேன்,, அவன்கிட்ட பேசிட்டு திருப்பி கால் பண்றேன்" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, வேணாம்" என்று சொல்வதற்குள் போனை கட் செய்திருந்தாள் நர்கீஸ்.
சற்று நேரத்தில் மீண்டும் கால் செய்தாள்.
"காயத்ரி, அவன் ஜஸ்ட் வாணியம்பாளையம் ரீச் ஆயிருக்கான், நீ ஒண்ணு பண்ணு, சீக்கிரம் ரெடி ஆகு, இன்னும் டுவென்டி மினிட்ஸ்ல அவன் உங்க வீட்டுக்கு வந்துடுவான்." என்றாள் நர்கீஸ்.
"சரி அக்கா" மனதில் பல போராட்டங்கள் ஓடின காயத்ரிக்கு. எப்படி பிரவீனை கையாள்வது, முபாரக்கிடம் என்ன பேசுவது, எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்குமா, அவர்கள் மனதில் இப்போது என்ன ஓடிக்கொண்டு இருக்கும், பிரவீன் எந்த மனநிலையில் தன்னை வந்து காரில் ஏற்றி செல்ல போகிறான், இதை விஜியிடம் சொல்லலாமா, ப்ரவீனோடு வேறு யார் இருப்பார்கள், தம்பிக்கு ஏதும் தெரிந்துவிடுமா, தம்பிக்கு முன்னாள் செந்தில் விஷயத்தை எப்படி சொல்வது, விஜி கோவித்துக்கொண்டால் அவளை எப்படி சமாளிப்பது......பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க, கருப்பு சுடிதார் அதில் ஊதா பூக்கள் போட்ட துப்பட்டா......மனப்போராட்டத்திலும் அழகிய முக பாவனைகளுடன் பிரவீனின் வருகைக்காக காத்திருந்தாள் காயத்ரி.
பகுதி 32 முடிந்தது.
------------தொடரும்--------------