கவிதை திருவிழா-

இதயம் பிழிந்த ஸ்வரமாய்
மயக்கம் தெளியா புல்லாங்குழலே.......
நானின்றி ,
நீ அழகில்லை,
நானின்றி,
உன்னை ரசிப்பாரில்லை,
நானின்றி
துடிக்க உனக்குயிரில்லை,
உலகமே உணர்ந்ததில்லை
நானில்லா வெறுமையை,
உன்னை நானும்,
என்னை நீயும்,
மாறிக் கவர்ந்தாட் கொண்டாலும்,
உரிமையில்லை இளைப்பாறிட,
என்னுள்ளே புதைந்திடு,பொறுத்திடு,
உள் சென்று,வெளி வந்து
காற்றாய் உன்னை தழுவிட,
பூக்களும் ஓர் நாள் புன்னகைக்கும்
.....காற்று......