காற்றினிலே வரும் ஓர் கீதம்
காற்றினாலே மிதந்து வந்ததோர் கீதம்
என் காதில் வந்து மெல்ல சொன்னது,
'என்னவனே ,என் மணாளனே ,இந்த
உன் காதில் இப்போது ஒலிக்கும் கீதம்
அறிவாயோ உனக்காக உனக்குமட்டும்தான்
நீ மட்டும் கேட்க நான் பாடி அனுப்பும் கீதம்
இது எனக்காக நான் அறிவேன் ஏங்கிடும்
உன் உள்ளத்திற்கு என் உள்ளத்தை
சேர்த்திடும் கீதம் உனக்கு ஓர்
இன்பக்கிளர்ச்சி தந்து உன்னை
ஊக்கிவிட நான் அனுப்பும் கீதம்
என்னவனே இந்த கீதமதை கேட்டு
புத்துணர்ச்சி பெற்று என்னை நினைவில் வைத்து,
எல்லையில் அந்நியரை சிதறடித்து,
வெற்றி வாகை சூடி , நாட்டின்
வீரமகனாய் ,வீட்டின் செல்ல மகனாய்
எந்தன் வீர மன்னனாய் திரும்பிடுவாய்
உன் வரவை நோக்கி காத்திருப்பேன்
விழிமேல் வழி வைத்து அதுவரை
நான் இங்கு