என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 69
ஏப்ரல் 24 , காயத்ரி வருகைக்காக முபாரக் சென்னை சென்ட்ரலில் தனது காரை வெளியே பார்க் செய்துவிட்டு ஸ்டேஷன் உள்ளே காத்திருந்தான், சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியானது, "கவுகாத்தியில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ், இன்னும் சற்று நேரத்தில் மூன்றாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும், கேப்ரிகட், க்ருப்யா த்யான் தே, கவுகாத்தி சே பெங்களூர் கே ரஸ்தா சென்னை ஆநேவாலி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தோடிசி தேர்மே பிளாட்பாரம் நம்பர் தீன் மே ஆயகி, பார் தி கைந் அட்டென்சன் ஆப் தி பாஸேன்ஜர்ஸ், டிரெயின் பிரம் கவுகாத்தி டு சென்னை வியா பெங்களூர், கவுகாத்தி எஸ்பிரெஸ் வில் அரைவ் இன் பிளாட்பாரம் நம்பர் 3 "
முபாரக்கின் போனுக்கு கால் செய்தாள் காயத்ரி, "அண்ணா ட்ரெயின் பேஸன் பிரிஜ்ஜில சிக்னலுக்கு நிக்கிது, இன்னும் ஒரு பைவ் மிண்ட்ஸ் அண்ணா" என்றாள் காயத்ரி.
"ஓகே ஓகே, காயத்ரி, நான் பிளாட்பாரம் ல தான் நிக்கறேன், கோச் நம்பர் எ 1 தான?" என்றான் முபாரக்.
"ஆமாம் அண்ணா" என்றாள் காயத்ரி.
சொன்னாற்போல் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரயில் நடைமேடைக்கு வந்தது, காயத்ரி கோச்சில் இருந்து இறங்கினாள்.
"அண்ணா, எப்படி இருக்கீங்க, எல்லாரும் எப்படி இருக்காங்க, நர்கீஸ் அக்கா, குட்டீஸ், அம்மா அப்பா ரியாஸ் அண்ணா, விஜய் அண்ணா, பிரவீன், எல்லாரும் எப்படி இருக்காங்க, மேட்ச் எல்லாம் செம்ம கலக்கல் போல, விழுப்புரம் அண்ட் நீங்க தான் பைனலாமே, செம்ம அண்ணா" என்றாள் காயத்ரி.
பெரிய ரியாக்ஷன் எதுவும் இன்றி முபாரக் "போலாமா காயத்ரி, சீக்கிரமா போகணும், நாளைக்கு பைனல்," என்றான்.
ஏதோ மாற்றம் முபாரக்கின் அப்ப்ரோச்ச்சில் இருப்பதாக உணர்ந்தாள் காயத்ரி.
தனது தந்தைக்கு போன் செய்துவிட்டு அடுத்து விஜிக்கு போன் செய்தாள்.
"விஜி, சென்னை க்கு வந்துட்டேன், ஆன் தி வெ டு வளவனூர், முபாரக் அண்ணா செம பஞ்சுவலா வந்துட்டாரு, இன்னும் டூ ஹவர்ஸ்ல அங்க இருப்பேன் டி" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், சரி டி, வா வா, வில் மீட்" என்றாள் விஜி.
"ஏய் முபாரக் அண்ணா கிட்ட பேசரியா" என்றாள் காயத்ரி.
வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல், சரி என்றும் சொல்ல முடியாமல் மௌனமாய் இருந்தாள் விஜி.
அதற்குள், "இந்தா பேசு" என்று முபாரக்கிடம் கொடுத்தாள் காயத்ரி.
"ஹ...ஹலோ......விஜி, எப்படி இருக்க மா?" என்றான் முபாரக்.
அமைதியாய் இருந்தாள் விஜி.
காயத்ரிக்கு எதுவும் தெரியக்கூடாது என்பதற்காக, "ஓ அப்டியா விஜி, வெரி குட் வெரி குட், அப்புறம் என்ன வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று இவனாக பேசினான்.
அப்போதும் மௌனமாய் இருந்தாள் விஜி.
"ம்ம், சரி விஜி, சரி விஜி" என்று மீண்டும் மீண்டும் விஜி மறுபுறம் பேசுவது போலவே பாவித்து தனியாக பேசினான் முபாரக்.
கடைசியாக விஜி பேசினாள்,"காயத்ரிக்கு எதுவும் தெரியாது, அவகிட்ட எதையாவது சொல்லி பிரச்சனை பண்ணிடாதீங்க" என்றாள் விஜி.
"ம்ம், தெரியும் விஜி, டோன்ட் வொரி, நான் ட்ரைவ் பண்றேன், அப்புறம் பேசறேன்" என்று போனை கட் செய்தான் முபாரக்.
"அப்புறம் அண்ணா, என்ன சுவாரஸ்யமா நடந்துச்சு, சொல்லுங்க" என்றாள் காயத்ரி.
காரை அமைதியாய் எதுவும் பேசாமல் ஓட்டினான் முபாரக்.
"என்ன அண்ணா எப்பவும் கலகலன்னு பேசிட்டு வருவீங்க, அதுமட்டும் இல்ல கூட யாரவது வருவாங்க, இன்னிக்கு தனியா வந்திருக்கீங்க, ஓ, எல்லாரும் பைனலுக்கு பிராக்டிஸ் பண்ராங்களா?" என்றாள் காயத்ரி.
"ஆ, ஆமாம் காயத்ரி" என்றான் முபாரக்.
"என்ன அண்ணா ஏதோ யோசனை ல வரீங்க? நாளைக்கு பைனல் அந்த டென்க்ஷனா?" என்றாள் காயத்ரி.
"ஆமாம் காயத்ரி, ஏதாவது சாப்பிடறியா?" என்றான் முபாரக்.
"இல்ல அண்ணா வேணாம், வீட்டுக்கு போய்டலாம்" என்றாள் காயத்ரி.
"சரி காயத்ரி" என்றான் முபாரக்.
"அண்ணா, சுவாரஸ்யமான விஷயம் சொல்லுங்கன்னு சொன்னேன்" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம்.....மேட்ச் எல்லாம் நல்லா போகுது, எங்களை விட விழுப்புரம் சூப்பரா ஆடுறாங்க, கப் கூட அவங்களுக்கு போக நெறய சான்ஸ் இருக்கு" என்றான் முபாரக்.
"ச்ச, வாய கழுவங்க அண்ணா, நீங்க தான் ஜெயிக்கணும், எனக்கு விஜிக்கு எல்லாருக்கும் நீங்க ஜெயிக்கணும் அதை நாங்க பாக்கணும், அது மட்டும் இல்ல, நீங்க, பிரவீன், விஜய், ரியாஸ் எல்லாரும் இருக்கும்போது எப்படி கப் வேற டீம் அடிக்கும்? சும்மா காமெடி பண்ணாதீங்க அண்ணா" என்றாள் காயத்ரி.
"இல்ல, அப்டி சொல்லல, நல்லா டப் குடுக்கறாங்கன்னு சொன்னேன்" என்றான் முபார.
"எவ்ளோ டப் குடுத்தாலும் உங்க சிங்கம் ரெண்டு சிங்கம் ரியாஸ் அண்ட் பிரவீன் இருக்காங்களே...போதாதா?" என்றாள் காயத்ரி.
பெரிய அளவில் ஒன்றும் பேசாமல் வண்டி மிக வேகமாக வளவனூரை அடைந்தது.
"ஓகே காயத்ரி, நான் கிளம்பறேன், நாளைக்கு பைனல், முடிஞ்சா வா" என்றான் முபாரக்.
"கண்டிப்பா அண்ணா, அதை விட என்ன வேலை, ஓகே அண்ணா, நீங்க கிளம்புங்க, அட்வான்ஸ் விஷால் அண்ட் கங்கிராட்ஸ் அண்ணா" என்றாள் காயத்ரி,
ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு காரை கிளப்பினான் முபாரக்.
"அண்ணா, விஜியை பாத்துட்டு போலாமே" என்றாள் காயத்ரி.
"இ......இல்லடா, எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க, என்னோட ரிகார்டஸ் சொல்லிடு ஓகே?" என்றபடி வண்டியை கடலூர் நோக்கி நகர்த்தினான் முபாரக்.
இரண்டு மணி நேரம் கழித்து விஜியின் வீட்டிற்கு போனாள் காயத்ரி.
விஜியின் முகத்தில் பல மாற்றங்கள் தெரிந்தன,"என்ன டி, எப்படி இருக்க" என்றபடி விஜியை கட்டிபிடித்துக்கொண்டாள்.
"நல்லா இருக்கேன் டி, நீ எப்படி இருக்க, ட்ரெயினிங் எப்படி போச்சு" என்றாள் விஜி.
"சூப்பர் டி, இங்க ஆபீஸ் வொர்க் எல்லாம் ஓகே தான?" என்றாள் காயத்ரி.
"ம்ம், எல்லாம் ஓகே தான்" என்றாள் விஜி.
"சரி, நாளைக்கு பைனல், பாக்க போறோம் இல்ல?" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம் போறோம், " என்றாள் விஜி.
"ரம்யா....நீ?" என்றாள் காயத்ரி.
"இல்ல, நான் வரல, நீங்க போங்க" என்றாள் ரம்யா.
"ஏய் அது இருக்கட்டும், பிரவீன் என்ன சொன்னான், ப்ரபோஸ் பண்ணிட்ட இல்ல, அவனுக்கும் ஓகே தான, செம லக்கி டி நீ," என்றாள் காயத்ரி.
"ஆமாம் டி, நான் ரொம்ப லக்கி"என்றாள் விஜி.
"சரி, அந்த வெளில நிக்கற வண்டி தான் பிரவீன் ப்ரெசெண்டா?, சூப்பர் டி" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம்" என்றாள் விஜி.
"என்ன நீ, ரொம்ப டல்லா இருக்க,லவ்வர்க்கு பிராபரா ட்ரீட்மெண்ட் குடுக்கலயா அந்த பிரவீன்?" என்றாள் காயத்ரி.
"நான் தான் நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கேன்" என்றாள் விஜி.
"நீ எப்படி டி...." என்றாள் காயத்ரி.
"நாளைக்கு தெரியும்" என்றாள் காயத்ரி.
"வர வர நீ ரொம்ப கொழப்பற, சரி, நாளைக்கு மீட் பண்றேன், பைனலுக்கு போறோம், ஓகே?" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், கண்டிப்பா" என்றாள் விஜி.
மறுநாள் பொழுது விடிந்தது. அன்றைய பொழுது ப்ரவீனுக்கு மறையப்போவதே இல்லை என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை, விழுப்புரம் அணிக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அனைவருமே விழுப்புரம் முதல் முறை கோப்பையை வெல்லும் என ஆவலோடு காத்திருந்தனர்.
பைனல் மேட்ச் கு வருவதாக இருந்த ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் ஒரு சில வேலை நிமித்தமாக வர முடியாத சூழ்நிலை, ஆனாலும் போக்குவரத்து சாலைகள் மேட்ச் காரணமாக மாற்றி விடப்பட்டிருந்தது, போஸ்ட் ஆபீஸ் வழியில் வரும் பாண்டி, சென்னை, வேலூர், விழுப்புரம், பண்ருட்டி, சேலம், ஈரோடு மார்க்க பேருந்துகள் அனைத்தும் கம்மியம்பேட்டை பாலம் வழியாக செம்மண்டலத்திற்கு மாற்றி விடப்பட்டது.
முபாரக் பிரவீன் ரியாஸ் விஜய் நால்வரும் தனியாக பேசினர்.
பிரவீன் நேரடியாக சொன்னான், "எனக்காக யாரும் நம்மளோட தன்மானத்தை விட்டுகுடுக்க கூடாது, முபாரக், முக்கியமா உனக்கு தா, ப்ராமிஸ் பண்ணு, என்ன ஆனாலும் நம்ம தான் ஜெயிக்கணும்" என்றான் பிரவீன்.
முபாரக் ஆச்சர்யமாக பார்த்தான்.
"யோசிச்சு தான் டா சொல்றேன், ப்ராமிஸ் பண்ணு, என்மேல ப்ராமிஸ் பண்ணு, எந்த சூழ்நிலையிலும் ஜெயிக்க தான் பாடுபடணும்" என்றான் பிரவீன்.
"தட்ஸ் தி ஸ்பிரிட் டா" என்றபடி ரியாசும் விஜய்யும் பிரவீனை கட்டி அணைத்துக்கொண்டனர்.
முபாரக் மட்டும் சற்று யோசித்தான்,"பிரவீன் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கியா...இதுல உன்னோட வாழ்க்கை அடங்கி இருக்கு" என்றான் முபாரக்.
"என் வாழ்க்கை இந்த கிரிக்கெட்டும் என் ப்ரெண்ட்ஸ் நீங்களும் தான் டா, எனக்கு என்ன ப்ராப்ளேம் ஆனாலும் நீங்க உங்க லைன் ல ஸ்டாபெர்னா இருக்கணும், ஓகே.......சியர்ஸ்......சியர்ஸ்........"என்றபடி பாரிவேர் வித் யு என்று பொறிக்கப்பட்ட விஜி கொடுத்த டிஷர்ட்டை அணிந்தான் பிரவீன். கழுத்தில் விஜி-பிரவீன் என பொறிக்கப்பட்ட விஜி கொடுத்த சங்கிலியை போட்டுக்கொண்டான்"
மேட்ச் தொடங்க இன்னும் அரை மணி நேரமே இருந்தது. டேவிட் விஜியையும் காயத்ரியையும் பார்த்து "ஹாய், வெல்கம், எங்க நம்ம கேலரி தான?" என்றான்.
காயத்ரி ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் பார்த்தாள்.
"இல்ல டேவிட், நாங்க ஆடியன்ஸ் கூட இருந்து பாக்கறோம், ஆல் தி பெஸ்ட்" என்றாள் விஜி.
டேவிட் சென்றதும்,"என்ன டி, நம்ம டீம் யாரும் நம்மள மீட் பண்ணல, நாம வரோம் னு அவங்களுக்கு தான் தெரியுமே" என்றாள் காயத்ரி.
"மீட் பண்ணலாம், வெய்ட் பண்ணு" என்றாள் விஜி.
"அது சரி, அவங்க கேலரி ல உக்காந்து பாக்கலாமே, எதுக்கு ஆடியன்ஸ் ல உக்காரனும்??ஓ டேவிட்க்காக பொய் சொன்னியா?" என்றாள் காயத்ரி.
"இல்ல, உண்மை தான் சொன்னேன், நாம ஆடியன்ஸ்ல தான் உக்காரப்போறோம்" என்றாள் விஜி.
"விஜி, லூசா நீ" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே முபாரக் வந்தான்.
"ஹாய் அண்ணா" என்றாள் காயத்ரி.
"ஹாய் காயத்ரி, ஹாய் விஜி, எப்போ வந்தீங்க" என்றான் முபாரக்.
விஜி முபாரக்கின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் பார்க்க, காயத்ரி முபாரக்கிடம் பேசினாள், "என்ன அண்ணா நர்கீஸ் அக்கா வரலியா?" என்றாள்.
"இல்ல காயத்ரி, பசங்கள சம்மர் க்ளாஸ் ல விடணும், அப்புறம் அவங்களுக்கு சாப்பாடு தரணும், சோ வீட்ல இருக்கா" என்றான் முபாரக்.
"சரி அண்ணா, ஆல் தி பெஸ்ட், நீங்க தான் ஜெயிக்கணும்" என்றாள் காயத்ரி.
"எல்லாரும் அப்டியே நெனச்சா ஜெயிப்போம் மா" என்று விஜியை பார்த்தபடியே சொன்னான் முபாரக்.
"அண்ணா, உங்க கேலரி ல உக்காந்து பாக்றத விட்டுட்டு ஆடியன்ஸ் பக்கம் உக்கார சொல்றா அண்ணா விஜி" என்றாள் காயத்ரி.
"விஜிக்கு என்ன விருப்பமோ அப்டியே செய் காயத்ரி, இல்லன்னா விஜி கோபத்துக்கு ஆள் ஆய்டுவ, சரி நேரம் ஆகுது, நான் மேட்ச் கு போறேன், மேட்ச் முடிஞ்சு பாக்கலாம், விஜி, பி ஹேப்பி...." என்றுவிட்டு முபாரக் நகர்ந்தான்.
"என்ன இந்த முபாரக் அண்ணா உளறிட்டு போவாரு, விஜி கோபத்துக்கு ஆள் ஆவேனா....எல்லாருமே லூசு ஆய்ட்டாங்களா" என்றபடி "சரி விஜி, உன்னோட விருப்பப்படியே வா, ஆடியன்ஸ்க்கு நடுவுல உக்காந்து பாக்கலாம்" என்றபடி ஆடியன்ஸ் உட்கார அமைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் காயத்ரி முதலில் நுழைய, பின்னாலேயே விஜியும் நுழைந்தாள், முன்ன இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். இவர்கள் வந்திருப்பதை ப்ரவீனும் பார்த்தான். மனதிற்குள் விஜி வந்திருக்கிறாள் என சந்தோஷப்படுவதா, அவள் தன்னோடு பேசக்கூட விரும்பவில்லை என்று நினைத்து வருந்துவதா என்ற குழப்பம் ப்ரவீனுக்கு....சற்று நேரத்தில் டாஸ் போட இரு அணி தலைவர்களும் சென்றனர்.
டாஸை வென்ற விழுப்புரம் கேப்டன் கணேஷ், பேட்டிங்கை தேர்வு செய்தான், முதலில் ஆட இறங்கினர் விழுப்புரத்தை சேர்ந்த ராஜா மற்றும் கணேஷ்.
ஆட்டத்தின் முதல் பந்தை வீச தயாரானான் ரியாஸ்.
பகுதி 69 முடிந்தது.
---------------------------தொடரும்-----------------------