என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 68

பொழுது விடிய சில மணித்துளிகள் இருந்தன, நர்கீஸ் எழுந்தாள், "என்ன மாமா நைட் புல்லா தூங்காம உக்காந்துட்டே இருக்கீங்க, என்ன ஆச்சு?" என்றாள்.

"ஒண்ணும் இல்ல, நீ போய் கொஞ்சம் காபி போட்டு எடுத்துட்டு வா, டேய் பிரவீன், எழுந்திரு, வா, ஜாகிங் போகலாம்" என்றான் பிரவீன்.

"இல்ல டா, நான் வரல, மனசு சரி இல்ல டா" என்றான் பிரவீன்.

"டேய், ஒரு சேஞ்சுக்காக தான், வா, அதான் இன்னிக்கு ஈவினிங் போய் பேசி சால்வ் பண்ண ட்ரை பண்ணலாம் னு சொன்னேன் இல்ல?" என்றான் முபாரக்.

"இல்ல டா, வேணாம், நம்மள பாத்தா விஜிக்கு இன்னும் கோவம் தான் வரும், விடு டா, என்னோட தலை எழுத்து, நான் என்னிக்குமே கஷ்டப்படணும் னு என் தலைல எழுதி இருக்கு, வேணாம் டா, விஜி சந்தோசம் தான் எனக்கு முக்கியம், அவளை கஷ்டப்படுத்தற மாதிரி கோவப்படுத்தற மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் நான் பண்ணமாட்டேன், வேணாம் டா, விஜியை பாக்க போகவேணாம்" என்றான் பிரவீன்.

"இல்ல டா, அவ ஏதோ ஒரு பிரச்சனை ல மாட்டிட்டு இருக்கா, அதனால தான் அப்டி பேசி இருக்கா, அவளோட இன்டென்ஸன் உன்னை கோவப்படுத்தி நீ அவளை கேட்டவன்னு நெனச்சு நீயா பிரிஞ்சு போகணும் னு நினைக்கறா, அவ பேசின வார்த்தைகளை வெச்சு நாளா யோசிச்சு பாரு, அவ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உன்னோட சென்டிமென்ட்ஸ் டச் பண்ற விஷயம் தான் இல்லையா? நீ அடிக்கடி சொல்றது என்ன, என்மேல அனாதைன்னு யாருக்கும் இரக்கம் வரக்கூடாது, இ நீட் லவ் நாட் யுவர் சிம்பத்தி ன்னு அடிக்கடி சொல்லுவ, சோ அதை முதல் ஆயுதமா பயன்படுத்தி இருக்கா, நெக்ஸ்ட் எங்க எல்லாரையும் தேவையே இல்லாம பேட் ஆஹ் பேசி இருக்கா, ஏன்னா உன்னோட எமோஷன்ஸை தூண்டனும், நீ கோவப்படணும் னு, நெக்ஸ்ட் உன்னோட கிரிக்கெட்.....இது எல்லாத்துக்கப்புறம் நீ அவமேல வெச்சுருக்கற அபெக்ஷன், இது எல்லாமே அவ உன்னை எமோஷனலா யோசிக்க வெச்சு அவ கெட்டவ அப்டின்னு நீ நினைக்கணும், நீயா அவளை விட்டு விலகி போகணும், உன்னோட மனசுல இருந்து அவளை நீ வெளிய தூக்கி போடணும் இது தான் அவளோட டார்கெட்" என்றான் முபாரக்.

"இல்ல டா, அவ பேசினது அப்டி தெரில, அப்டி இருந்தா அவ ஏன் டேவிட லவ் பண்றதா அவன் முன்னாடியே சொல்லணும்?" என்றான் பிரவீன்.

"அந்த ஒரு விஷயம் தான் டா எனக்கு புரில" என்றான் முபாரக்.

"அது எனக்கு புரிஞ்சுபோச்சு டா, ஏன்னா அவ மனசுல நான் இல்ல, அவன் தான் இருக்கான், வேணாம் டா, போனது போனதாவே இருக்கட்டும், விஜியை என்னால மறக்க முடியாது தான், ஆனா இன்னொருவாட்டி அவ முன்னாடி போய் நிக்கிற தைரியம் எனக்கு இல்ல டா, அவ ஒரு சின்ன வார்த்தை சொன்னா கூட அது என் உயிர் வரைக்கும் பாதிக்கும், ஆனா ஒண்ணு டா, இன்னும் என் விஜி என்னை விட்டு பிரியல, கண்டிப்பா என்கிட்டே அவளா பேசுவான்னு நினைக்கறேன் டா, என்னிக்கு அந்த நம்பிக்கை என்னை விட்டு போகுதோ அன்னிக்கு நான் உயிரோட இருக்க மாட்டேன் டா, அதனால தான் சொல்றேன், உங்க எல்லார்கூடயும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு போறேனே, இன்னிக்கு விஜியை பாத்தா கண்டிப்பா அந்த நம்பிக்கை போய்டும் டா, ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேக்கறேன், விஜியை மீட் பண்ண வேண்டாம்" என்றான் பிரவீன்.

"என்ன டா, நீ இப்டி செண்டிமெண்ட் முடிவு எடுத்தா அவ சொன்னது உண்மைன்னு ஆய்டும் டா" என்றான் முபாரக்.

"இல்ல டா, என்னை விட டேவிட் விஜியை நல்லா பாத்துப்பான், அவன் பணக்காரன், அந்த ஜோடி நல்ல ஜோடி தான் டா" என்றான் பிரவீன்.

"பிரவீன் நான் என்ன சொல்றேன் னு....."முபாரக் முடிப்பதற்குள், "நான் நம்பறேன், என் விஜி உதட்டளவில் என்னை பிரிஞ்சாலும் மனசளவுல பிரியல, அவளால என்னை தூக்கி போடா முடியும், ஆனா என் மனசு ல இருந்து அவளை யாராலும்...ஏன் அவளால கூட வெளியே எடுக்க முடியாது டா. அவ எங்க யார்கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும், அதை பாத்தா போதும், அவளை நீ மீட் பண்ணி கில்டி ஆக்கி அவ கஷ்டப்படறதையோ அப்டி இல்லன்னா ரிவெர்ஸா அவ உன்னை ஹர்ட் பண்றதையோ பாத்தா அங்கேயே என் உயிர் போய்டும் டா, என்னிக்கு விஜி என்னால ஹர்ட் ஆகறான்னு நான் பாக்கறேனோ என் மனசு என்னிக்கு அதை உண்மைன்னு நம்புதோ அன்னிக்கு என் உயிர் இருக்காது டா.......சரி வா ஜாகிங் போகலாம்" என்றான் பிரவீன்.

அதற்குமேல் முபாரக் ஒன்றும் பேசவில்லை.

பிரவீனின் செல் ஆப் ஆனது ஆனது தான், ஆன் ஆகவே இல்லை. ரம்யாவிடம் இருந்து முபாரக் செல்லிற்கு ஒரு மெசேஜ் வந்தது,"ஆல் தி பெஸ்ட் பார் யுவர் செமி பைனல்" என்று. அடுத்த நொடியே காயத்ரியின் மெசேஜும் வந்தது, அதே வாசகத்துடன்.

முபாரக் முடிவு பண்ணிக்கொண்டான், ரம்யாவுக்கும் காயத்ரிக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என்று. உடனே விஜய்க்கும் ரியாஸுக்கும் போன் செய்து, ரம்யா அண்ட் காயத்ரி கால் செய்தாலோ மெசேஜ் செய்தாலோ பிரவீன் விஜி விஷயம் தெரிய வேண்டாம், ஏன் என்றால் அவர்க இருவருக்குமே இன்னும் விஷயம் தெரியவில்லை,அவர்கள் இருவருமே சகஜமாய் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்றான்.

ஆனால் விஜியோ, டேவிட் இந்து டால்மியா அணியுடன் ஆடப்போகும் ஆட்டத்திற்கு அவனுக்கு ஆல் தி பெஸ்ட் அனுப்பினாள். பதிலுக்கு அவன் ஐ லவ் யு விஜி, இன்னிக்கு மேட்ச் பாக்க வரியா" என்று அனுப்ப, விஜி, "இல்லை, நீ இந்த மேட்ச் ல வின் பண்ணு நான் பைனலுக்கு வரேன்" என்று மெசேஜ் அனுப்பினாள்.

விஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனைவரிடம் இருந்தும் வந்தது. பிரவீன், முபாரக், விஜய் மற்றும் ரியாஸ் இடம் இருந்து தவிர, அதிலிருந்தே புரிந்துகொண்டாள் அவர்களுக்கு நேற்று நடந்த விஷயம் தெரியும் என்று, ஆனால் அது விஜிக்கு எந்த பாதிப்பும் தரவில்லை. அனுப்பிய அனைவருக்கும் நன்றி மெசேஜ் அனுப்பிய விஜி கடலூர் அணி வீரர்கள் ஒருவருக்கு கூட ரிப்லை செய்யவில்லை, காயத்ரி போன் செய்தாள், "விஜி ஹேப்பி பர்த்டே டி, அப்புறம் என்ன விஷயம், ஆல் சக்ஸஸ்??" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், சரியான முடிவு தான் டி எடுத்திருக்கேன், ப்ரபோஸ் பண்ணிட்டேன்" என்றாள் விஜி.

"ம்ம்,, டேவிட் ரியாக்ஷன் எப்படி இருந்துது, ஷாக் ஆயிருப்பனே....இனிமே அவன் தொல்லை உனக்கு இருக்காது இல்ல?" என்றாள் காயத்ரி.

"ஆமாம் காயத்ரி, இனிமே அவன் என் வாழ்க்கை ல வரவே மாட்டான், நீ எப்போ வர?" என்றாள் விஜி.

"எனக்கு இன்னும் எய்ட் டேஸ் இருக்கு" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், நீ யார்கூடயாச்சும் பேசினியா" என்றாள் விஜி.

"நேத்து ஈவினிங் பேசினேன், அப்புறம் யார் கூடயும் பேசல, மெசேஜ் போட்டேன், பட் யாருமே ரிப்லை பண்ணல, மே பி மேட்ச் பிஸில இருப்பாங்க போல, சோ நானும் இப்போ அவங்கள டிஸ்டர்ப் பண்ணவேணாம், நேர்ல வந்து பாத்துக்கலாம் னு விட்டுட்டேன்" என்றாள் காயத்ரி.

"சரி டி" என்றாள் விஜி.

"அது சரி, பிரவீன் ரியாக்ஷன் எப்படி இருந்துது, அவன் என்ன சொன்னான் உன்கிட்ட" என்றாள் காயத்ரி.

மௌனமாய் இருந்தாள் விஜி.

"என்ன டி, பேசு, லைன் ல இருக்கியா இல்லையா?" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், பிரவீன் பயங்கர ஹேப்பி டி, எல்லாருமே ஹேப்பி, சரி நீ நேர்ல வா, பேசிக்கலாம்" என்று சொல்லி போனை கட் செய்தாள் விஜி.

"அக்கா இன்னிக்கு மேட்ச் பாக்க வரலியா. மார்னிங் மேட்ச் நம்ம கடலூர் டீம்" என்றாள் ரம்யா.

"ரம்மி, போ, போய் வேலை ஏதாவது இருந்தா பாரு, என்ன மேட்ச் உனக்கு, இனிமே அவங்க மேட்ச் எல்லாம் பாக்க போகக்கூடாது, அதை பத்தி என்கிட்டே பேசாத, போ" என்றாள் விஜி.

"என்னக்கா ரொம்ப கோவமா இருக்க, என்ன விஷயம், ஏதாவது ப்ராப்ளேமா?, ஆபீஸ் ல லீவ் தறலியா?" என்றாள் ரம்யா.

"ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு ரம்மி, போ" என்றாள் விஜி.

"நீ அப்போ இன்னிக்கு கடலூர் வரலியா" என்றாள் ரம்யா.

"நான் போறேனோ இல்லையோ, நீ போகக்கூடாது ரம்யா" என்றாள் விஜி.

"நீ தடுக்காத என்னை, நான் போவேன், நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன், நீ வரலைன்னா போ, உனக்கு ஆபீஸ்ல லீவ் குடுக்கலன்னா நான் என்ன பண்ணுவேன்" என்று நடந்தவை தெரியாமல் பேசிவிட்டு போனாள் ரம்யா.

சற்று நேரத்தில் கிளம்பியும் விட்டாள். அவள் போனதும் விஜி தனது வேலைக்கு சென்றாள். நேரம் பத்து இருக்கும், விஜிக்கு ரம்யாவிடம் இருந்து மேசேஜ் வந்தது, "பிரவீன் இன்ஜுர்ட், அவுட் ஆப் தி பீல்டு, மேட்ச் இந்த க்ரிட்டிக்கல் பொசிஷன்" என்று.

எந்த பதிலும் விஜி தரவில்லை.

சற்று நேரத்தில் அடுத்த மெசேஜ், "நெய்வேலி கம்ப்ளீடெட் தேர் இன்னிங்ஸ், புவர் பெர்பார்மன்ஸ் பை கடலூர், மே பி கடலூர் வில் லூஸ் தி மேட்ச், தே நீட் டூ செவென்டீன் இன் டவென்டிபைவ் ஓவர்ஸ், பட் வித்தவுட் பிரவீன்." என்று அனுப்பினாள் ரம்யா.

"ரம்மி, ஐ ஆம் பிசி, ப்ளீஸ் டோன்ட் சென்ட் அணி மெசேஜ்" என்று ரிப்லை செய்தாள் விஜி.

மாலை ஏழு மணிக்கு தான் விஜி ஆபீசில் இருந்து வந்தாள்.

ரம்யா சோகமாக உட்கார்ந்திருந்தாள், ஏதோ நடந்துவிட்டது என்பதை விஜி புரிந்துகொண்டாள்.

"ரம்மி, ஏன் டல்லா இருக்க' என்றாள் விஜி.

"தெரியாத மாதிரி கேக்கற,"என்றாள் ரம்யா.

"என்னமோ நடந்துவிட்டதோ என்ற பயத்தில், என்ன டி சொல்லு, நெஜம்மா தெரியாது" என்றாள் விஜி.

"அதான் சொல்லி இருப்பார்களே அந்த கடலூர் டீம் ல எல்லாரும்" என்றாள் ரம்யா.

"என்னன்னு சொல்லு டி, "பொறுமை இழந்து சொன்னாள் விஜி.

"என்னக்கா, சும்மா பொய் சொல்ற, அவங்க எல்லாருக்கும் நீ தான் முக்கியம், இல்ல? இன்னிக்கு நான் மேட்ச் பாக்க போய் இருந்தேன், யாருமே என்கிட்டே சரியா பேசல, முக்கியமா இந்த பிரவீன், முபாரக், ரியாஸ், விஜய் நாலு பெரும் ஒரு வார்த்தை கூட பேசல, இதுவே நீ இருந்தா இப்டி பண்ணுவாங்களா, அவங்க பிரவீன் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு ஆடினாங்க, நான் எவ்ளோ ப்ரே பண்ணினேன், ஆனா வின் பண்ணினதும் என்கிட்டே பேசக்கூட இல்ல, பிரவீன் இல்லாம விஜய் அண்ணா முபாரக் அண்ணா ரெண்டு பெரும் எவ்ளோ நல்லா வெளயாடினாங்க, ஆனா நான் மேட்ச் முடிஞ்சதும் அவங்ககூட பேச போறேன், ஆனா யாருமே என்கிட்டே சரியா பேசல, கோவத்துல சொன்னேன், உங்களுக்கு விஜி அக்கா தான் முக்கியம், நான் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல, ஆனா உங்க விஜி க்கு நான் அப்டேட் அனுப்பும்போது அவ எப்படி ரிப்லை பண்ணினா தெரியுமான்னு சொல்லி உன்னோட ரிப்லை காட்டினேன், அப்போ கூட நீ பிசியா இருப்ப, வேலை நேரத்துல எதுக்கு விஜியை டிஸ்டர்ப் பண்ணரன்னு சொல்றாங்க, உன்னை மட்டும் இவ்ளோ முக்கியத்துவம் குடுத்து பழகறாங்க, எனக்கு மட்டும் ஏன் இப்டி.....எல்லாத்தைவிட முக்கியம், செகண்ட் செமி ல விழுப்புரம் ஜெய்க்கற மாதிரி இருக்காம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே விஜி போனுக்கு டேவிட் மெசேஜ் வந்தது. "வீ வோன் தி செமி, ஏப்ரல் 25 , கடலூர் வெர்சஸ் விழுப்புரம் பைனல், என்னோட ட்ரீம் மேட்ச், அந்த டீம் கு எப்படி பனிஷ்மென்ட் தரேன்னு பாரு விஜி, என்னை பாஸ்ட் லே எவ்ளோ ஹர்ட் பண்ணிருப்பாங்க, அதுக்கு எல்லாம் சேத்து வச்சு தரேன், நீ எங்க சப்போர்ட்டா கண்டிப்பா வரணும், அதை பாத்தே அவங்க டீமார்லைஸ் ஆகணும், அது இன்னும் நமக்கு சாதகமா இருக்கும் விஜி" என்று மெசேஜ் போட்டான்.

அதை படித்துவிட்டு ரம்யாவை பார்த்தாள் விஜி.

"இனிமே நான் மேட்ச் பாக்க வரமாட்டேன், அவங்க ஏன் என்கிட்டே சரியா பேசல, நான் எவ்ளோ ஹர்ட் ஆனேன் தெரியுமா...."என்றாள் ரம்யா.

ஆறு நாட்கள் எல்லாம் அமைதியாய் இருந்தது. ஒருநாள் மாலை முபாரக் விஜிக்கு போன் செய்தான், இரண்டு மூன்று முறை எடுக்காமல் விட்டாள் விஜி.

சற்று நேரம் கழித்து மீண்டு போன் செய்தான் முபாரக், போனை அட்டென்ட் செய்து எதுவும் யோசிக்காமல், "அண்ணா, எதுக்கு இப்போ கால் பண்றீங்க, நான் டேவிட் கூட இருக்கேன், ப்ளீஸ் கால் பண்ணாதீங்க, எனக்கு தான் உங்ககூட எல்லாம் பேச புடிக்கல என்னை டிஸ்டர்ப் பண்ணவேணாம் னு பிரவீன் கிட்ட சொன்னேன் இல்ல?" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் விஜி.

மீண்டும் போன் செய்தான் முபாரக், "அண்ணா உங்கமேல ஒரு மரியாதை இருக்கு, அதை கெடுத்துக்காதிங்க அவன் தான் பைத்தியம் னா நீங்க வேற ஏன் இப்டி என்னை போன் பண்ணி டாச்சர் குடுக்கறீங்க?" என்றாள் விஜி.

"விஜி, நான் பிரவீன், எப்படி விஜி இருக்க, இன்னும் கோவமா டா, நான் என்ன டா தப்பு செஞ்சேன்? எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை எதுக்கு விஜி? நீ டேவிட கல்யாணம் பண்ணிக்கோ அது உன்னோட விருப்பம் டா ஆனா என்கூட பேசாம பாக்காம எப்படி டா உன்னால இருக்க முடியுது? நான் என்ன தப்பு பண்ணேன் னு சொல்லு டா, நான் திருத்திக்கிறேன், அதுக்காக இப்டி பேசாம இருந்து என்னை பினிஷ் பண்ணாத டா, ப்ளீஸ், உன் கால் ல விழுந்து கேக்கறேன்" என்றான் பிரவீன்.

மௌனமாய் இருந்தாள் விஜி.

"பேசு விஜி, ப்ளீஸ், என்னோட தப்பு என்னன்னு சொல்லு விஜி, நான் திருத்திக்கறேன்" என்றான் பிரவீன்.

"நீ இன்னும் என்னை டிஸ்டர்ப் பண்ற பாத்தியா இதான் உன்னோட மிஸ்டேக், உன்கூட பேசினா எனக்கு அருவருப்பான இருக்கு, இனிமே நீ என்கூட பேசினா நீ என்னை கஷ்டப்படுத்தற மாதிரி, நான் சந்தோஷமா இருக்கணும் னு நீ நெஜமாவே நெனச்சா என்னை இனிமே டிஸ்டர்ப் பண்ணாத அது தான் எனக்கு நீ செய்யற பெரிய உதவி" என்றாள் விஜி.

"விஜி ஏன் டா இவ்ளோ பெரிய பனிஷ்மெண்ர், தப்பு பனாமா இவ்ளோ பெரிய தண்டனை எதுக்கு டா, பியூச்சர்ல இது தப்பான முடிவுன்னு உனக்கு தெரிஞ்சா நீ ரொம்ப கில்டி ஆய்டுவ டா, ப்ளீஸ், என்ன பிரச்சனைன்னு சொல்லு, நான் அதுக்கான லஸ்டிபிகேஷன் தரேன், அப்புறம் முடிவு பண்ணு டா" என்றான் பிரவீன்.

"ஐயோ, என்னை எதுக்கு இப்டி டார்ச்சர் பண்ற, எனக்கு உன்னை பிடிக்கல, இப்டியே பண்ணினா நான் சூசைட் பண்ணிக்குவேன் பிரவீன், நான் சாகணும் னு நெனச்சா நீ என்னை இப்டி டிஸ்டர்ப் பண்ணு" என்றாள் விஜி.

"என்ன விஜி, நீ சாகணும் னா உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து செஞ்சேன், உன்னோட சந்தோஷமே என் குறிக்கோளா இருந்தேன், அட்லீஸ்ட் உன்ன ஒரு வாட்டி பாக்கலாமா டா, அது போதும், அதுக்கு மேல நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்" என்றான் பிரவீன்.

"என்னை நேர்ல பாக்க ட்ரை பண்ணினா மரியாதை கெட்டுடும் பிரவீன் உனக்கு" என்றாள் விஜி.

"விஜி, ஏன் விஜி அப்டி எல்லாம் பேசற, எனக்கு உன்னோட மனசுலே ஒரு துளி கூட இரக்கம் இல்லையா டா" என்றான் பிரவீன்.

"கால் ல போட்டுக்கறத வீட்டுக்கு வெளில தான் பிரவீன் விட்டுட்டு வரமுடியும், நம்ம கால பாதுகாக்குதுன்னு சாமி ரூம் கு அதை எடுத்துட்டு வர முடியாது" என்றாள் விஜி.

"ஏன் விஜி இப்டி எல்லாம் பேசற, அவ்ளோ கேவலமா விஜி நான், அவ்ளோ பெரிய தப்பா பண்ணிருக்கேன் விஜி? நான் உன்னோட கால் செருப்புக்கு சமமா விஜி?" என்றான் பிரவீன்.

"பிரவீன், ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ், போனை வை, இப்போ உனக்கு என்ன, என்னை ஒருவாட்டி பாக்கணும் அவ்ளோதானே, நான் உங்க பைனல் பாக்க வரேன், ஆனா உன்னை பாக்க இல்ல, உன்னோட தோல்வியை பாக்க, என்னை சந்தோஷப்படுத்தணும் னு உனக்கு தான் ரொம்ப ஆசை ஆச்சே பிரவீன், நீ டேவிட் கிட்ட தோக்கறத பாக்க தான் நான் வரேன், அதான் எனக்கு இந்த உலகத்துலயே பெரிய சந்தோசம், போனை வை" என்று சொல்லிவிட்டு போனை கோபமாக வைத்தாள் விஜி.

அதுத நொடியே காயத்ரி போன் செய்தாள், "விஜி எப்படி இருக்க" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், சொல்லு டி, நல்லா இருக்கேன்" என்றாள் விஜி.

"ஏன் டி கோவமா இருக்க?" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, ஒரு நாய் விடாம கோளச்சுகிட்டே இருக்கு வெளில, அதான் அதை வெரட்டிட்டு வந்தேன், சொல்லு டி, எப்போ ரிட்டர்ன்?" என்றாள்.

"டூ டேஸ் ல டி, நாளான்னிக்கு காலைல ட்ரெயின், சென்னை கு வந்து அங்க இருந்து விழுப்புரம், முபாரக் அண்ணா கிட்ட பேசினேன், அவர் வரேன் னு சொன்னாரு, பிரவீன் கு போன் பண்ணினேன், லாஸ்ட் வீக்ல இருந்து அவர் போன் ஆப்பிளை இருக்கு, என்னன்னு தெரில, உனக்கு எப்படி காண்டாக்ட் பண்ராரு?" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், அவன் போன் ல இருந்து தான்" என்று பொய் சொன்னாள் விஜி.

"சரி டி, கேச் யு ஆப்டர் டூ டேஸ்" என்று போனை வைத்தாள் காயத்ரி.

பிரவீன் வாழ்க்கை இப்படி ஒரு கஷ்டத்தை எதிர்நோக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. காரணமே தெரியாமல் விஜியின் இந்த அளவு கோபத்திற்கு பிரவீன் என்ன செய்யப்போகிறான் என்று அவனுக்கே புரியவில்லை.

பகுதி 68 முடிந்தது.

---------------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (24-Sep-17, 4:43 pm)
பார்வை : 235

மேலே