என் வாழ்கை விடுகதை - 2
ரசிக்கவும் முடியவில்லை
விலகவும் வழியுமில்லை
எந்தன் விதியை சொன்னேன்
மதி குழம்பி நானும் நின்றேன்
எனக்கான வாழ்கை என்று
எதை நான் தேர்ந்தெடுத்து
எப்படி வெற்றி கொள்ள
வெற்றி கொள்வது எளிதுமல்ல
விரக்தி என்னும் சக்தி கொண்டு
மாற்றம் செய்ய முயன்றவன் நான்
விருப்பம் இல்லாமல் தொடங்கும்
வாழ்கை இல்லை விரக்தி முக்தி கொண்டு
வாழ்கையை முதன்முறையாய்
தொடங்குகிறேன்
போராட மனம் கொண்டேன்
போதும் என்ற குணம் கொண்டேன்
சக்தியற்ற என் வாழ்வில்
தத்தி தத்தி நானும் நடந்தேன்
ஒரு இலக்கு இல்லை கையில் விளக்கும்
இல்லை
பகலும் நடு இரவாய் இரவும் நடு பகலாய்
தண்ணீரற்ற என் வாழ்கை வனம்
கண்ணீர் கொண்டு தாகம் அடங்கும்
சுவரின்றி ஒரு சித்திரமா
கைகளின்றி ஒரு காவியமா
முயற்சி இன்றி ஒரு சரித்திரமா
என் நினைவில் உதிக்கும் ஒரு வார்த்தை
தினமும் என்னை உலுக்கும்
ஒரு நாளுக்கான சக்தி கொடுக்கும்
நாளை விடியும் என்று உறங்காதே
உன்னால் முடியும் என்று உறங்கென்று
நான் படித்த வாழ்கை பாடம்
புத்தகமின்றி ஆசான் இன்றி
இதமாய் ஒரு வாசகம்
நான் ஜெய்க்க அதுவே மந்திரம்
சில நாள் தோல்வியில் முடியும்
சில நாள் வெற்றி அருகினில் தெரியும்
நான்கடி ஏற எட்டடி சறுக்க
எட்டடி ஏற ஆறடி சறுக்கும்,
எல்லாம் விதி என்றால்
விதிக்கும் விதி உண்டு அதை வெல்லும் மதி
உண்டு
என்று எனக்குள் எண்ணிக்கொண்டு
தினம் போராட்டம் தொடரும்
எந்நாளும் விடுகதையாய் பதிலை தேடி கொண்டு
தொடரும் விடுகதை