தாய் நாடே

புலம்பெயர் தேசத்தில்
இருந்து கொண்டு
தாய் நாடே உன்னை
ஒரு முறை எண்ணி
பார்க்கையில்
வெட்கத்தில் தலை
குனிந்து போகிறேன்
ஆறுதல் கூறிவிட கூட
நேரம் இன்றி இயங்கும் இயந்திர
வாழ்க்கையில் நோய் வரும்போது
தாய் நாடே உந்தன் பெருமையை
நினைத்து பார்க்கிறேன்..
உனக்கு எத்தனை
அடையாளம் அதை எல்லாம்
உன்னுடத்தில் பவித்திரமாக இருக்க
இங்கே அந்த முகங்களை
காணமால் போக செய்து விட்டு
அனாதையாக நிக்கிறோமே
இது விதியா அல்லது சதியோ
யார் அறிவார்? எம் நிலையை
விரும்பியோ விருப்பம் இன்றியோ
எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதால்
புலன் பெயர் வாழ்க்கையை
அரவணைத்து கொண்டோம்
அரவணைத்த நன்றி உபகாரமாக
அவர்களின் உறவு
நிலையை விரும்பினோம்
அவர்களின் மொழியை
உயிராக கொண்டோம்
அவர்களின் கலாச்சாரத்தை
பெருமையாக எண்ணினோம்
அதனால் எங்கள் பிள்ளைகளுக்கும்
உன் அடையாளங்கள்
உறவு நிலை தொடர்பை சொல்லி
வளர்க்க தோன்றவில்லையே.
உன் தேசத்தின் பிள்ளையாக இருந்தும்
நாடோடிகளின் வாழ்வுக்கு
அடித்தளமாக மாறினோம்
என்பதை எண்ணி கலங்குகிறோம்

எழுதியவர் : காலையடி அகிலன் (2-Oct-17, 10:11 am)
Tanglish : thaay naadey
பார்வை : 344

மேலே