நீ நீ எனக்குள்
நீ நேற்று வரை எனக்கு யாரோவாக
நீ இன்றுலிருந்து என் உயிராக
நீ காற்று போல எனக்குள் நுழைந்தாயோ
நீ கீற்று போல எனக்குள் இழைந்தாயோ
நீ சாரல் போல என்னை நனைத்தாயோ
நீ தூறல் போல என்னை நினைத்தாயோ
நீ இருள் போல என்னை மறைத்தாயோ
நீ கயிறு போல என்நீர் இறைத்தாயோ
நீ தயிர் போல எனக்குள் கடைந்தாயோ
நீ உயிர் போல எனக்குள் கலந்தாயோ
நீ வாகனம் என என்னை ஏற்றிசென்றாயோ
நீ மோகனம் என என்னை ஊற்றிச்சென்றாயோ
நீ வனம் என என்னை புதைத்தாயோ
நீ தினம் என்னை வதைத்தாயோ
நீ கண்கள் கொண்டு என்னை சிதைத்தாயோ
நீ கனவுகளுக்குள் என் ஆசைகள் விதைத்தாயோ
நீ மயில் போல என்னை வசீகரித்தாயோ
நீ குயில் போல எனக்குள் இசைத்தாயோ
நீ நெல்மணி போல எனக்குள் விளைந்தாயோ
நீ கல்மழை போல எனக்குள் விழுந்தாயோ
நீ கனவு போல எனக்குள் விழைந்தாயோ
நீ மழை போல எனக்குள் விழுந்தாயோ
நீ சேற்றைப் போல எனக்குள் கலந்தாயோ
நீ சோற்றை போல எனக்குள் செரித்தாயோ
நான் தோற்று நீ எனக்குள் வென்றாயோ
நான் நேற்று நீ நேற்று நாம் நாளையாவோமா
நான் ஒளித்து நீ எனக்குள் எழுந்தாயோ
நான் இறந்து நீ எனக்குள் பிறந்தாயோ