உயிரே உன்னை தேடி

உன் விழிகளின் ஈர்ப்பு விசையில் உறைந்து போவேன் ..
சிறுமியல்ல இவளும் கன்னியென்று
உணர்ந்து போவேன்...

உன் விரல்கள் ஐந்தும் ஊழியாகி போக
உலகைமறந்து உன் முன் கல்லாகி போவேன்

தாரமாகி உன்னை தாங்க என் இதயத்திற்குள் கோயில் செய்து

தாயாகி உன்னை தாலாட்ட மடிமீது தொட்டில் செய்வேன்

மொழி அறியா கனவுகள் கண்ணோடு பலகொண்டு...

விழியறியா நேரத்தில் காணவேண்டும் எந்தன் கண்ணாளனை

எழுதியவர் : (5-Oct-17, 7:37 pm)
பார்வை : 362

மேலே