நீ இருள் அல்ல

கலைந்திட
நீ
கனவல்ல
உதிர்ந்திட
நீ
மலரல்ல

சிதறிட
நீ
மழைத்துளி அல்ல
வற்றிட
நீ
ஆறல்ல

மறைந்திட
நீ
வலி அல்ல
தொடர்ந்திட
நீ
என் நிழலல்ல.

அனைந்திட
நீ
தீபம் அல்ல
அகன்றிட
நீ
இருளல்ல.

எழுதியவர் : Parithi kamaraj (12-Oct-17, 4:47 pm)
Tanglish : irul alla
பார்வை : 97

மேலே