மனப் போராட்டம்
பொழுது போக்கிவிட்டுப்
போய்விட்டாய் நீ...
கூடவே, என் மனத்தையும்
கலைத்துப் போட்டுவிட்டு...
களைத்துப் போயிருக்கிறேன் நான்...
உனக்கு விளையாட்டாக...
எனக்குப் போராட்டமாக...
அன்பையும், ஆதரவையும்
சந்தேகக் கண்கொண்டு
பார்க்க முடியுமா?