வாழ்த்து

வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடினேன்..
வாழ்க்கை தவறிச்சென்ற பின்பும்
வாழத்தெரியாத நானும்
வார்த்தை தவறிய நீயும்..இன்று
வாழ்க்கை காத்திருக்கிறது உனக்கு
வார்த்தை காய்ந்துவிட்டது எனக்கு..
வாழ்க்கை வட்டத்தில் நீ உரைத்த
வார்த்தை ஜாலம்...மறக்கவில்லை இன்னும்
வார்த்தை பொய்த்து போகயிலெல்லாம்
வாழ்க்கையும் சேர்ந்து நொந்து வீழ்கிறது
வாழ்த்துக்கள் போய் சேராவிடினும்
வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்..என்றும் நலமுடன்

எழுதியவர் : இவள் நிலா (23-Oct-17, 10:29 pm)
Tanglish : vaazthu
பார்வை : 61

மேலே