கண் கொட்டும் வரிகள்
கண் சொட்டும் துளிகள் சேர்த்து
சோக வரிகள் எழுதிட வேண்டும்.....
துளி உதிர்வது தொய்ந்து போனால்
நினைத்து நினைத்து துளி சேர்க வேண்டும்....
நெஞ்சிலே விதையாய் விழுந்தாய்
முட்டி மோதி துளிர் விடும் முன்னே
காய்ந்து நீயும் சருகாய் ஆனாய்...
நெஞ்சிலே நினைப்பை வைத்து
சோகத்தை சுவைக்க வைத்தாய்...
உதிராத பூக்கள் எல்லாம்
கனியாக மாறும் இயல்பே....
மறவாத நினைவுகள் எல்லாம்
கனமாகக் கூடுது முறையா...
கண்ணில் இனி பார்வை ஏனோ....
கன்னி உன்னை காணா உலகில்
வெளியே உலவும் உருவம் எல்லாம்
கண்ணுக்கு கானல் நீரே...
நொடி மாறும் இடமும் கூட
நொடிவில்லா நினைவே வேண்டும்
கண் சிமிட்டும் தருணம் கூட
அழகிய முகம் மிளிர வேண்டும்...
விரல் தொடா பூக்கள் என்றும்
பூமாலை அவதுமில்லை...
உன் நினைவில்லா நாட்கள் எல்லாம்
என் வாழ்வோடு சேர்வதில்லை....
பா.முருகன்