பேரழகு

கருப்பாக இருந்தாலும் நீ அழகு
உன் கண்களில் வீசும் ஒளி அழகு
உன் புருவங்கள் அழகு
உன் நெற்றி சின்ன பொட்டழகு
நீ விட்டு விட்டு கண்சிமிட்டும்
நொடிகள் அழகு
உன் உடைகள் அழகு
அதில் பூத்திருக்கும் பூக்கள் அழகு
உன் ரோஜா இதழில் ஒட்டியிருக்கும்
வண்ணம் அழகு
உன் குதிரைவால் ஜடை அழகு
உன் கழுத்தில் விளையாடும்
மெல்லிய தங்கச்சங்கிலி அழகு
உன் பாதங்களை அலங்கரிக்கும்
பூப்போட்ட காலணி அழகு
மொத்தத்தில் என் மனதை கொள்ளை கொள்ளும் நீ பேரழகு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Oct-17, 9:58 am)
Tanglish : perazhagu
பார்வை : 1622

மேலே