பெண்சிசுக் கொலை
உங்கள் ஊடலில்
உண்மை இல்லை
அதன்
கூடலில்
காதல் இல்லை
காமம் எனும்
மாயயை வைத்து
கட்டிலில் நீ இருந்த
நேரம்
வியர்வை
மூச்சி
அத்தனையும் பொய்யடா!
உண்மையாக இருந்திருந்தால்
கொன்றிருக்கமாட்டாய்..
அனாதையாக விட்டிருக்கவும்மாட்டாய்..
பிறந்தது
பெண்குழந்தை எனும்போது!