இலையோசை
ஓசையின்றி மெதுவாய் தென்றல் தீண்ட,
படபடக்கும் இறகுகளைவிட இலேசாகிவிட்ட,
பளபளக்கும் தங்ககாசுகளாய் மஞ்சள் இலைகள்,
திகுதிகுவென்று பாரம் கூடியதுபோல்,
மடமடவென்று கிளைகள் விட்டு பிரிய,
சலசலவென்று சப்தத்துடன் தங்க மழை பொழிகிறது,
பரபரவென்று பரந்துகிடக்கிற மஞ்சள் பூமியின் மேல்,
சரக்சரக்கென்று நடக்கும் கால்கள் எழுப்பும் ஓசையுடன்!