இயற்கை அழகு
வானம் எங்கும் ஓடிக் கழிக்கும் முகில்கள்
வானில் நின்று விசிறி அடிக்கும் மழை
வெக்கை மறைந்த இன்பம் தலை துவட்ட விரும்பா மரங்கள்
அடர்ந்த கொடிகள் வனத்தின் அழகில் எங்கும் படரும் பசுமை
மழையின் நனைந்தும் காய்ச்சல் வாரா மான்கள்
கிளையின் நடுவே காதல் கொள்ளும் கிளிகள்
மலர்கள் அழகில் கிரங்கிச் சுற்றும் வண்டுகள்
கானம் பாடி களிப்பில் திரியும் குயில்கள்
வண்ண ஆடை தரித்து ஆடும் மயில்கள்
பூமிப் பெண்ணை அணைத்து அசையும் நதிகள்
உலகின் அழகை ரசிக்க உயரும் மலைகள்
நீந்திக் கழித்து உலகைச் சுற்றும் மீன்கள்
இயற்கை அழகோ எத்தனை
வியப்பில் விரியும் எனது விழிகள்
எழுத வார்த்தை இன்றித் தவிக்கும் எனது மொழிகள்
ஆக்கம்
அஷ்ரப் அலி