நட்பு
அன்பான நட்பே
நான் உன்னை விட்டு நீங்கவில்லை
என்றும் உன்னுடனேயே yirukkiraen
அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் நட்பு தான் - அதனால்
நீ பேசாதிருக்கும் நொடிகள் கூட மரணம் தான்
இம் மண்ணில் பிறக்கையில் உன் நட்பு இல்லை
விண்ணில் பார்க்கையில் நீ உடன் இல்லை
நாம் பழகிய நாட்கள் சில - அதில்
பேசிய நாட்கள் பல
தொலைதூரம் செல்லும் நட்பு வேண்டாமென்றால்
நம் மண்ணில் நட்பு கொஞ்சம் குறைவு தான்
சூரியனுக்கு நிலா அழகு தான் - ஆனால்
அவை சந்திப்பதேயில்லை
கடலுக்கு கரை நட்பு தான்
அவ்வப்போது வந்து தொட்டு செல்லும்
வானுக்கு பூமி நட்பு தான்ழா
தன் கண்ணீரால் அன்பை சொல்லும்
நட்பு இல்லையேல் மனிதன் இல்லை
மனிதனுக்கு மட்டுமல்ல
அனைத்து ஜீவராசிகளுக்கும் நட்பு உண்டு
நம் பிறப்பிலிருந்து இறக்கும் வரை
உடன் வருவது நட்பு
எந்த ஒரு இரத்த சொந்தமும் இல்லாது
தோல் கொடுப்பதும் நட்பு தான்
எல்லோரிடத்திலும் நட்பு பழகாது
பழகினால் சாகும் வரை விடாது.