மக்களாட்சி

உண்மை விலையை உணரவில்லை
உயிர் பலி தீர்த்தும் நினைவிலில்லை
மறுவிடுதலை தேடும் இழிநிலையில்
என்னுயிர் பாரதம் வீழ்ந்திட்ட்டளா !

கொள்ளையர் கையில் ஆட்சிகளா
கொட்டமடிக்க சட்டங்களா
இன்னுயிர் நீத்த தியாகிகளின்
இடிந்திடும் கோடி கனவுகளா

கற்றவர் தற்குறி ஆனதனால்
கொட்ட்றவர் கையில் சதமனாய்
கோடிகளோடு மாடிகளாய்
குடிசைகளோடு மடிஆனாய்

வெள்ளையர் இங்கு வரவில்லை
எங்கள் வாழ்வை சிதைக்கவில்லை
இந்தியன் எங்கள் இந்தியனை
சுதந்திரதலே சுட்டுவிட்டான்

மாசு இந்தியனே வெளியேறு எல்லைகோட்டைவிட்டு
அந்தமான் சிறைகதவுகள் மீண்டும் திறக்கட்டும்.






எழுதியவர் : கீரனூர் பைசுர் ரஹ்மான். (28-Jul-11, 2:06 pm)
சேர்த்தது : faizuraan
பார்வை : 334

மேலே