அனுபவமுள்ளவர்களுக்கு இது புரியும்
மறக்கவும், மறுக்கவும் முடியாத உண்மை கடலுக்குள் மூழ்கி திளைக்கும் வாழ்வில் நீ யாரென்பதே பலருடைய முதல் கேள்வியாக, நீ என்ன வேலை செய்கிறாய்? நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய்? என்பவை அடுத்தடுத்த கேள்விக் கணைகளாய் பாயும்...
அனுபவமுள்ளவர்களுக்கு இது புரியும்...
காதல், நட்பு என்று எல்லாவற்றிற்கும் ஒரு கௌரவத்தை எதிர்பார்க்கும் உலகில் கண்ணீர் பெருக்கெடுக்கும் கண்களுக்கு பஞ்சமில்லை...
காரணமென்ன?
எல்லாரும் ஒரு விதத்தில் நம்மை நம்பி அன்பு காட்டுபவரை ஏமாற்றிவிடுகிறோம்...
அனுபவமுள்ளவர்களுக்கு இது புரியும்...
அது சிறந்ததா? இது நமக்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து கொண்டு துடிக்கும் இதயங்களை உயிரற்ற பொருட்களாய் மதிக்கிறோமே.. இதைவிட வேறு என்ன வேண்டும், நாம் உயிர்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்கு...
அனுபவமுள்ளவர்களுக்கு இது புரியும்...
பொய்களால் ஏமாற்றி மகிழ வைப்பதைவிட உண்மைகளால் காயப்படுத்தி விடுதலென்றும் உத்தமமே...
அவை என்றென்றும் நல்ல மருந்தாகுமே...
வாழ்வில் முன்னேற உரமாகுமே...
அனுபவமுள்ளவர்களுக்கு இது புரியுமே...