அவள் அது அழகு
தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும் மெல்ல
நானிங்கு இருக்கிறேன் என்று
கண்ணிமையால் காட்சிபரப்புவாள்
இடப்புறம் வகிடெடுப்பாள்
வாய்மூடி கண்சிரிப்பாள்
வராத வார்த்தைகளையெல்லாம்
வரவேற்க எனையும் சேர்த்தழைப்பாள்
குங்குமம் கொஞ்சம் கோதி
நடுநெற்றியில் புள்ளிவைப்பாள்
புள்ளிகளின் நாட்களை ஒன்றாக்கி
புதுக்கோலம் வரைந்துவைப்பாள்
மூக்குத்தி நுனி மூக்கினோரம்
தென்றல் தினம் ஆடவைப்பாள்
கம்மல்களும் அழகுதானென்று
தென்றலையே சொல்லவைத்தாள்
என் நாட்களின்
வெகுமானம் அவள்
நான் நனைந்த - முதல்
கார்காலம் அவள்