பறந்த காதலி

மென்மைத் தேகம் கண்டேன்
--- மனதைச் சிறிதாய் மயக்கியதே
வன்மை மூக்கை வஞ்சி
--- வளைத்து அழகாய் விழித்தனளே
தன்மை தாங்கி நானும்
--- தனிமை தெரிந்து நடந்தேனே
நன்மை நாடி அவளோ
--- நதியை நெருங்கி நகர்ந்தனளே

நதியின் கரையில் நடந்தேன்
--- நயந்தே அவளோ நின்றனளே
மதியின் ஒளியில் மகிழ்ந்தேன்
--- மகிழா அவளோ நடந்தனளே
சதியின் சரமோ சினந்தேன்
--- சிலிர்தே சிறகை விரித்தனளே
விதிதான் வலிதோ வியந்தேன்
--- விரைந்தே குயிலோ பறந்ததுவே!

எழுதியவர் : புதுயுகன் (6-Nov-17, 2:03 am)
Tanglish : prantha kathali
பார்வை : 68

மேலே