நிம்மதியான ஊர்வலமோ

தவளையைத் தாங்கிய அரவமே பாரீர் !
அரவத்தில் மேலே சவாரி செய்தல்
அதிசயமன்றோ உலகினிலே !
அரவம் விழுங்கும் இரையாவாய் !
அறிதல் வேண்டும் தவளையாரே !
நட்பாய் இருக்கும் நண்பர்களோ !
பண்பைக் காட்டும் பரவசத்தில்
தன்னை மறந்தே நிற்கின்றேன் !
மழையில் ஒதுங்கிய அழகிய காட்சி !
நிறத்தில் ஒன்றாய் இருப்பதனால்
நிம்மதியான ஊர்வலமோ !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Nov-17, 6:59 pm)
பார்வை : 83

மேலே