அவள் குரல் திருக்குறள்
அவள் குரல் நான் நேசிக்கும் திருக்குறள் !!!!!!!!!!
ஆறடி மூங்கில் ஓன்று துளை போட்டு கொண்டதோ
பெண் பொல்லாங்குழலென ஆண்வர்க்கத்தை சூறையாட
இவள் செவ்வாயில் இருந்து வரும் வார்த்தைகளெல்லாம்
சவ்வாதாய் மணக்கிறது என் இதயத்தில்
தொடுதிரையை மீட்டும் இவள் குழலோசை
கடல் போல் ரீங்காரமாய் நான் கேக்கும் அலையோசை
இடிகளெல்லாம் ஓசை குறுக்கும் இவள் பேச்சை கேட்க மெல்ல
கொடிகளெல்லாம் பின் தொடரும் பூங்கொடியாள் பேசி செல்ல
எல்லை இல்லா இவள் பேச்சு தொல்லைகளாய் மாறி போகின்ற
இவள் மௌன ராகம் பாடுகையில்
ஆசையாய் இவள் பேச ஆதவனுக்கும் செவி கூச
சில நேரம் தமிழ் மொழியும் இவள் செய்வாயாய் விட்டு
வெளிவர தயக்கம் காட்டும் ......
எல்லோரும் நேசிக்கும் ஒரு குரல்....மொத்தத்தில்
அவள் குரல் நான் நேசிக்கும் திருக்குறள் ....