திகசி------திக சிவசங்கரனுக்கு வாழ்நாள் சாதனை விழா----------- --அன்று படித்ததை பகிர்கிறேன்

தாய்மை உணர்வை சமுதாயத்துக்கு ஊட்டியவர் தி.க.சி. என, எழுத்தாளர் பொன்னீலன் புகழாரம் சூட்டினார்.


சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தி.க. சிவசங்கரனுக்கு "வாழ்நாள் சாதனை விழா" திருநெல்வேலியில் சனிக்கிழமை(4/10/08) நடைபெற்றது.


சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் தி.க.சி.க்கு, திருநெல்வேலியில் சனிக்கிழமை(4/10/08) நடைபெற்ற பாராட்டு விழாவில், அவரைக் குறித்த ஆவணப் பட குறுந்தகட்டை வடமலை மீடிய குழுமத் தலைவர் வ. ஈஸ்வரமூர்த்தி வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் தி.க.சியின் மகன் எழுத்தாளர் வண்ணதாசன். உடன் (இடமிருந்து) கவிஞர் கழனியூரன், ஓவியர் வள்ளிநாயகம், தீப. நடராஜன், இயக்குநர் எஸ். ராஜகுமாரன், எழுத்தாளர்கள் திகசி, சிகரம் செந்தில்நாதன், பொன்னீலன்.

விழாவில், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:
தி.க.சி. பன்முக ஆளுமை கொண்டவர். இங்கு பல பெரிய மனிதர்கள் ஒன்று கூடி நடத்தும் இப்பாராட்டு விழா யாருக்கும் கிடைக்காத விருதுக்கு சமமாகும். எழுத்தாளர்களை, இலக்கியவாதிகளைப் பாராட்டும் பண்பு கொண்டவர் தி.க.சி. அவரது 50 பைசா அஞ்சல் அட்டையில் ஊக்கம் பெற்றோர் பலர். அதன் மூலம் அவர்கள் ஏராளமான படைப்புகளைப் படைத்தனர்.

இலக்கியவாதி ஒரு தாய். அதாவது பண்பாட்டுத் தாய். அந்தத் தாயிடம் சுரக்கும் பாலைக் குடிக்கும் மனித சமுதாயம் எழும். அந்த வகையில் தி.க.சி. தாய்மை உணர்வை சமுதாயத்துக்கு ஊட்டிய தாய் ஆவார். அவர்தான் என்னையும் வளர்த்தார். ஜீவா, வல்லிக்கண்ணன் வழியில் வந்த அவர், எவராக இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்ட தயங்காதவர் தி.க.சி. என்றார் பொன்னீலன். விழாவில், தி.க.சி. குறித்த "21இ, சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி டவுண்" ஆவணப் பட குறுந்தகட்டை ஈஸ்வரமூர்த்தி வெளியிட, அதை தி.க.சி.யின் மகன் எழுத்தாளர் வண்ணதாசன் பெற்றுக் கொண்டார்.


தி.க.சி.யின் ஏற்புரை:-

எனக்கான பண்புகளை வளர்த்தது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்தான்.
தமிழ் தேசியம், இந்திய தேசியம், சர்வதேச தேசியம் என்ற பார்வைதான் வேண்டும். தமிழில் புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை அவசியம்.


இங்கே எனக்குக் கூறப்பட்ட பாராட்டுரைகளுக்கு நான் தகுதி உடையவனா எனத் தெரியவில்லை. ஆனாலும் என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என கண்ணீர் மல்க கூறினார் தி.க.சி.

நன்றி: தினமணி







Show trimmed content
Previous Previous Page 1 NextNext

எழுதியவர் : (13-Nov-17, 9:27 pm)
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே