குழந்தாய் எதிர் காலம் உனதடா

அன்பு கொள்ள வேண்டும் - தீதை
அறிந்து வாழ்தல் வேண்டும்
அடக்கம் கருணை நேர்மை - மனதில்
அணிந்து வாழ வேண்டும்

கல்வி கேள்வி அதிலே - உனது
கவனம் இருக்க வேண்டும்
நாளை உனது கையில் - எண்ணம்
நாளும் உனக்கு வேண்டும்

தீது உள்ள உலகு - இதனை
தெரிந்து வாழ வேண்டும்
இளமை வாழ்வில் உன்னை - செதுக்கும்
எண்ணம் மனதில் வேண்டும்

பொய்கள் கூற வேண்டாம் - மற்றோர்
புறமும் பேச வேண்டாம்
மெய்யாய் இருக்க வேண்டும் - மற்றோர்
மகிழ்வில் நாட்டம் வேண்டும்

பெற்றோர் உனது கற்றோர் - இறைவன்
பெருமை உணர்தல் வேண்டும்
மற்றோர் சுற்றம் வறியோர் - அவரை
மதித்தல் வாழ்வில் வேண்டும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (14-Nov-17, 4:54 pm)
பார்வை : 85

மேலே