கனவில் வந்த காரிகை

கனவில் வந்த காரிகையே
கன்னம் மின்னும் மின்விளக்கே

தூரிகை கொண்டு தீட்டுதற்குள்
தாரகை நான் தான் என்றாயோ

காரிருள் நிலையில் கட்டுண்டு
மோன வேளையில் காட்சி தந்து

பேரிருள் பரவலை கடந்து சென்று
பகலவன் ஒளி போல் நின்று விட்டாய்

இருளின் வெள்ளம் வரும் பொழுது
ஞாயிரின் இறக்கம் மங்குவது போல்

பிறையென எழுந்துவிட்டு
ஏன் மறைந்தாய்

கனவில் வந்த காரிகையே
மீண்டும் வருவாய் காரிகையே

காண்பதெல்லாம் காட்சியென்றால்
கண்டது இதுவும் காட்சியன்றோ

எழுதியவர் : ரமணி (15-Nov-17, 4:37 pm)
பார்வை : 140

மேலே