அழகிய கவிதை
அவளைபோல் அழகாக சிரிக்க
நிலாவும் முயல்கிறது
பின் தோற்று மறைகிறது
எதிர்பாரா நேரத்தில் நான்
பரிசளித்த ரோஜாவை பார்த்து
உன் கன்னங்கள்
வெட்கத்தால் சிவக்கிறது
அதை கண்ட ரோஜா இதழ்கள்
இன்னும் சிவக்கிறது
கடவுள் யோசித்து எழுதினாரோ
இல்லை மிகவும் நேசித்து எழுதினாரோ
அவள் என்னும் அழகிய கவிதையை
காதலில் பல கவிதைகள் உண்டு
கவிதைகள் மேல் எனக்கு
கொஞ்சம் காதல் உண்டு
என்மேல் காதல் கொண்ட ஒரு
அழகிய கவிதையும் இங்குண்டு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கவிப் புயல்
சஜா. வவுனியா