பாராட்டுநான் ஒரு முட்டாளுங்க
நினைவுகள் ஆயிரம் என் வாழ்வில் அதை தருணம் தோறும் நினைவுகூர்ந்தே நகர்கிறது எனது கடிகார முட்கள்.இளைப்பாற கண் அயர்ந்தால் நினைவுகளின் கடலில் மிதக்கிறேன்.கண் விழித்தால் நினைவுகள் தந்த பாதையில் நடக்கிறேன்.நினைத்து நினைத்து பார்த்தேன் நினைவுகள் நிரம்பி வழியும் வரை.என் நினைவுகளில் நினைவுகள் சதவிகிதத்தில் உணர்வுகளை பட்டியல் இட்டு வைத்திருக்கிறது .சந்தோஷம் இருபது சதவிகதம் ,சோகம் அறுபது சதவிகதம் , எஞ்சியது இதனின் மிச்சங்கள்.
பள்ளியில் படிப்பு வரவில்லை என்று தேம்பிய சோகம் ,முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பார்த்து கண்ட பொறாமையின் சோகம். நாமும் என்றாவது ஒரு நாள் இதுபோன்று வாங்கமாட்டோமா என்று கனவின் நினைவிலே நித்தமும் கழித்த நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கவில்லையே
பள்ளியில் ஆரம்பித்த சோக ஊற்று தொடர்ந்தது கல்லூரியிலும் , படிப்பு படிப்பு என்று பெற்றவர்களும் சுற்றத்தார்களும் கூவி வர .படிப்பு வராதவன் முட்டாள் என்ற பட்டமும் தந்தார்கள் .நானும் நான் முட்டாள் தான் என்று சந்திரபாபு பாடல் வரிகளை நினைவு கூர்ந்து அப்பட்டத்தையும் ஏற்றேன்.முட்டாளும் ஆகினேன்.
நான் தான் முட்டாள் ஆகிற்றே என்று கலைகளிலும் விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு தோல்வியை தழுவி அதை ஏன் உறுதிசெய்யவேண்டுமென்று விலகியிருந்து பல அறிவாளிகள் கூறுவதையும் செய்வதையும் கவனித்த வாறே கழிந்தது என் வாழ்வின் நினைவுகள்
நினைவுகளில் மூழ்கி இருந்த தருணத்தில் புத்தருக்கு கிடைத்த ஞானம் எனக்கு சிறிது கிடைத்தாற் போல்
எழுந்தது ஒரு கேள்வி “படிப்பு மட்டுமே பெரிதென்றென்னும் முட்டாள்கள் “வாழும் பகுதியில் பிறந்து வளர்ந்ததற்கு அவர்கள் கொடுத்த “பாராட்டு” பத்திரம் என்று......