தமிழ் எழுத்துக்களின் வரி வடிவ வளர்ச்சி

தமிழ் எழுத்துக்களின் வரி வடிவ வளர்ச்சி
முகவுரையில்
நாம் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்துக்கள் நமக்கு எப்படி கிடைத்துள்ளது என்பதை அழகாக விளக்கி உள்ளார் இந் நூலில். படித்து பாருங்கள்
டாக்டர். சொ.பரமசிவம் அவகளின் “நற்றமிழ் இலக்கணம்” என்னும் நூலில் , அதன் தொன்மை, செம்மை, இலக்கணம்,அதிகாரங்கள்,,போனறவைகள் காணப்படினும் எனக்கு பிடித்த,புரிந்த இந்த பகுதி “ தமிழ் எழுத்துக்களின் வரி வடிவம் எங்கனம் வளர்ச்சி பெற்று” தற்போது நாம் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வடிவத்தை அடைந்தது என்பதை இந்த கட்டுரையில், அவரின் பார்வையிலேயே காட்டி இருக்கிறேன்.

உலகில் தொன்மையான காலத்தில் வாழ்ந்த மனிதன் தன் உள்ளத்தில்
உள்ள உணர்வுகளை முக குறிப்புகளாலும்,செய்கைகளாலும்,பிறருக்கு
உணர்த்தினான்.வயிறு பசிக்கிறது என்பதனை வயிற்றை தொட்டு காண்பித்தும் சோறு உண்ணவேண்டும் என்பதனை கையால் வாயை தொட்டு காண்பித்து கருத்தினை தெரிவித்தான்.

அடுத்ததாக தனது கருத்துக்களை தெரிவிக்க ஒலியை பயன்படுத்தினான். அது வாய் மூலமாகவும், பிற கருவிகள் மூலமாகவும் தெரிவித்தான். அடுத்த கட்டமாக எழுதி காட்டுவதற்காக “வரி வடிவங்களாக பயன்படுத்தினான். இந்த வரி வடிவங்களே பின்னர் எழுத்துக்களாக வளர்ச்சி பெற்றது.

சித்திர எழுத்துக்கள்

பழங்கால மக்கள் தங்களுடைய எண்ணங்களை பிறருக்கு சொல்ல சித்திர
எழுத்துக்களை பயன் படுத்தினர். எகிப்து நாட்டில் பொருட்களை சித்திரமாக வரைந்து கருத்துக்களை வெளியிட்டனர். இத்தகைய எழுத்துக்கள் எகிப்து நாட்டின் பிரமீடுகளில் இன்றும் காணலாம். மெசபடோபியாவிலும் இவ்வெழுத்துக்கள் இன்றும் காணப்படுகின்றன.
சீன மொழியின் எழுத்துக்கள் எல்லாம் சித்திர எழுத்துக்கள் ஆகும். சீன, ஜப்பான் எழுத்துக்கள் இப்படித்தான் ஆயிற்று. நாம் இடமிருந்து வலமாக எழுதுவோம், அரேபியாவில் வலமிருந்து இடமாக எழுதுவர். சித்திர எழுத்துக்களை கீழிலிருந்து மேலாக எழுதுவர்.
சிந்து சம்வெளியிலும்,மொக்ஞ்சதாரோவிலும், அகழ்ந்து ஆராய்ந்த பொழுது, அங்கு வாழ்ந்தவர் திராவிடர் என்றும், அவர்கள் பயன் படுத்திய எழுத்துக்கள் சித்திர எழுத்துக்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இவ்வெழுத்துக்கள் பருப்பொருளை மட்டும் உணர்த்தக்கூடியது, நுண் பொருட்களையோ, மற்ற உணர்வுகளையோ தெளிவு படுத்த இவ்வெழுத்துக்கள் உதவா. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆகிய நாடுகளில் பழங்கால மனிதன் குகைகளில் இவ்வித எழுத்துக்களை வரைந்துள்ளான்., அமெரிக்கா, இந்திய நாடுகளிலும் இவ்வகை எழுத்துக்கள் கண்டுபிடித்துள்ளனர்.




ஆப்பெழுத்துக்கள்

இதன் பிறப்பிடம் மேற்கு ஆசியா கண்டத்தில் உள்ள ஈராக் நாட்டின் நடுப்பகுதி ஆகும். இப்பகுதி முந்தைய காலங்களில், சுமேரியா, பாபிலோனியா, மெசபடோபியா என்று அழைக்கப்பட்டது. ஈராக் நாடு மலைகள் அற்றது. ஆனால் களி மண் நிறைந்தது, சுமேரியர்கள் களிமண்ணை குழைத்து பின் தகடுகளாக்கி அவற்றில் ஆப்பு வடிவ எழுத்துக்களை பதித்து எடுத்து விட்டு அக்களிமண் தகடுகளை வெயிலில் காய வைத்தோ, அல்லது சுட வைத்தோ, சான்றுகளை உருவாக்கினார்கள். இந்த எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களில் இருந்து தோன்றியதாகும்.வேறு ஒரு முறையாக ஈரக்களி மண்ணில் ஒரு சிறு குச்சியால் முனையை சாய்த்து அழுத்தினால் ஒரு பக்கம் கொஞ்சம் பிதுங்கியது போல் வரும், அந்த களி மண் அம்பு போல் இருக்கும். இதற்கு அம்பு வடிவ எழுத்துக்கள் என்றும் பெயர்.
மேலும் களி மண்ணைத் தண்ணீர் விட்டு குழைத்து தட்டையாக ஆக்கிக்கொண்டார்கள். பிறகு பட்டையாக உள்ள ஒரு கருவியை சாய்த்தவைத்து அந்த களி மண்ணில் அழுத்தினார்கள். அதனால் ஒரு அடையாளம் அந்த மண்ணில் ஏற்பட்டது. அதையே எழுத்து என்று வைத்து கொண்டார்கள்.மெசபடோபியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் உருவாக்கிய எழுத்து இப்படித்தான் இருந்த்து.
இது அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலை கழகத்தில் உள்ள
அருங்காட்சியகம்,சிகாக்கோ பல்கலைக்கழக்த்திலுள்ள கீழ்த்திசை நிறுவனம்,ஏல் பல் கலைக்கழக்த்திலுள்ள பாபிலோனியப பொருட்காட்சியகம், அகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வெழுத்துக்களை கண்டு பிடித்தவர் இத்தாலி நாட்டு பயணியான “வாலே” என்பவர் ஆவார். கி.பி.1627 அக்டோபர் திங்கள் இதை வெளியிட்டார்.







பிராமி எழுத்துக்கள்


பிரமனால் இவ்வெழுத்துக்கள் ஊண்டாக்கப்பட்ட்தாக கருதப்பெற்றதால் இவற்றிற்கு “பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று. பன்மொழி புலவர் அப்பாத்துரையார் “இவ்வெழுத்து சுருக்கெழுத்தாளர்கள் பயன்படுத்தும் எழுத்துக்களைப் போல இருக்கும் என்பார்.
இவை வடமிருந்து இடமாக எழுதப்பட்டன.. சில இடங்களில் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன. இன்று நாம் உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் இன்றுள்ள வடிவத்தில் எழுதிக்கொண்டு வருகின்றோம். பிராமி எழுத்துக்கள் வேறு வேறு வடிவத்தில் இருந்தன. வட இந்திய பொழிகளை போல க்,ச, ட, த, ப, ஆகிய நான்கு எழுத்துக்களுக்கும் நன்கு நான்கு எழுத்துக்கள் உண்டு.








தமிழி எழுத்துக்கள்

பண்டைய காலத்தில் தமிழ் மொழியில் இருந்த எழுத்து வகைக்கு தமிழி என்று பெயர். தாமிழி என்றும் இது கூறப்படுகின்றது. கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்ட “சமயவாயங்க சுத்த (சமவாயாங்க சூத்திரம்) என்னும் சமண நூலில் இந்தியாவில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் இப்பெயருடைய எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. அந்த பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. அதை பம்மி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.
இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தை சேர்ந்த்து என்று தெரிகின்றது. ஆனால் இரண்டிற்கும் வேறு பாடுகள் உண்டு.





வட்டெழுத்துக்கள்

பிராமி எழுத்துக்கள் காலப்போக்கில் வட்டெழுத்துக்களாக மாறின, என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி எழுத்துக்களே காலப்போக்கில் மாறுதல் அடைந்து வட்டெழுத்துக்களாக உருவெடுத்தன என்று கூறுவார்.காரணம் தமிழ் குகை தளங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் தமிழ் மொழி செய்திகளே அடங்கியுள்ளன என்று கூறினார். இதை கல்வெட்டு அறிஞர் டாக்டர் நாக சாமி ஏற்றுக்கொள்கிறார்.

ஆனால் மறைமலை அடிகளும், டாக்டர்.ஏ.சி. பர்னல் அவர்களும் மறுத்துள்ளனர்.
பிராமி எழுதுக்களில் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி இல்லை, வட்டெழுத்துக்களுக்கு புள்ளி உண்டு. பிராமி எழுத்துக்களில் இருந்து தோன்றியிருப்பின் வட்டெழுத்துக்களில் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி இல்லாமல் இருந்திருக்கும். பிராமி எழுத்துக்களில் க,ச,ட,த,ப என்னும் ஒலிகல் நான்கு நான்கு வகைகளாக ஒலிக்கப்படுகின்றன.ஒலிகளுக்கு தகுந்தவாறு ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு எழுத்துக்கள் உண்டு. பிராமியிலிருந்து வட்டெழுத்து தோன்றியிருப்பின் நான்கு நான்கு எழுத்துக்கள் ஒலிகளுக்கு தகுந்தவாறு வட்டெழுத்தில் அமைந்திருக்கும், அங்கனம் இல்லாது ஒலிகள் வேறு பட்ட பொழுதும் எழுத்து ஒன்றாகவே இருக்கின்றது. இது இந்த மொழியின் சிறப்பு.

வட்டெழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும்?

தொல்காப்பியர் காலத்திற்கு (கி.மு.4ம் நூற்றாண்டுக்கு முன்பே வட்டெழுத்துக்கள் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்துள்ளன. தொல்காபியர் கூறிய எழுத்துக்களின் வரி வடிவங்களுக்கு ஒத்தே வட்டெழுத்துக்கள் இருப்பதால் தொல்காபியர் காலத்திற்கு முன்பே வட்டெழுத்துக்கள் தமிழ் நாட்டில் வழக்கில இருந்துள்ளன் என்பது தெளிவாகிறது.
வளைந்த கோடுகளின் வடிவமைப்பில் இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால் இப்பெயராயிற்று., நேர் கோடுகளை துணைக்கோடுகளாகவும் உள்ளதால் “கோலெழுத்து” என்றும் பெயர். கல்வெட்டுகளில் “வட்டம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்கள் யாவும் வட்டெழுத்து வகையை சார்ந்த்தாகும், தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், முதலியன வட்டெழுத்து வகையை சார்ந்தவை.
ஓலையில் எழுதும்போது கிழிந்து விடாமல் இருக்க வட்டெழுத்து முறை தோன்றியது. வட்டெழுத்து சாசனங்களில் மிகவும் பழமையானது கி.பி.எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்தது.அக்காலத்திலேயே இந்த லிபி நன்கு வளர்ச்சியடைந்த ஒரு தனி வடிவத்தை பெற்றிருக்கிறது.
சிலம்பு, மணிமேகலை, ஆகிய இலக்கியங்கள் வட்டெழுத்தில் ஆக்கப்பெற்றன என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.நடனகாசிநாதன் கூறுகின்றார்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் பேரிலக்கியங்களை ஆக்குவதற்கு ஒரு வகை எழுத்து பயன்பட்டதெனில் அவ்வெழுத்து முறை அதற்கு முன் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற நடு கற்கள் மூலம் வட்டெழுத்துக்களின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள முடிகின்றதெனினும் சோழர்கள் காலத்தில் அவ்வெழுத்துக்கள் குறைய தொடங்கியது. அதற்கு பின் சிறிது சிறிதாக மறைந்து கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் அவை முற்றிலும் மறைந்து விட்டன.
கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் எவ்வகை எழுத்தில் திருக்குறளை எழுதினார்? அக்காலத்தில் செல்வாக்கில் இருந்த வட்டெழுத்துக்களில்தான் அவர் எழுதினார்.


கண்ணெழுத்து

கண் போன்று இவ்வெழுத்துக்கள் இருந்த்தால் இப்பெயராயிற்று. சிலப்பதிகாரத்தில் இதை பற்றி குறிப்பு வருகின்றது. துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறக்கப் பெற்ற சரக்குகளை குறிக்கும்போது
“கண்ணெழுத்துப் படுத்த வெண்ணூப் பல்பொதி” என் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
இறக்கப்பட்ட சரக்குகள் அவரவரவருக்கு போய் சேர சின்ன்ங்கள் அதன் மேல் பொறிக்கப்படும்.இதற்கு “கண்ணெழுத்து” என்று பெயர்.

கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை
முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு (சிலப்பதிகாரம் 26:170-171)

கிரந்த எழுத்து

வட மொழியில் கிரந்தம் எனின் நூல் என்று பொருளாகும். வட மொழி எழுத்துக்களை தமிழக்த்தில் கிரந்தம் என்றனர். தமிழகத்தில் இருண்ட காலம் எனப்படும் களப்பிரர் காலத்தில் கி.பி.3-6 ஆம் நூற்றாண்டுகள் இவ்வெழுத்துக்கள் புகுந்தது.பல்லவர் ஆண்ட கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை அது உச்ச நிலையில் இருந்தது.
பல்லவ மன்னர்களின் செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இவ்வகை எழுத்துக்கள் காணப்படுகின்றன.
சமணர்கள் இவ்வெழுத்து முறையை பயன்படுத்தி, ஸ்ரீ புராணம்,ஸ்ரீமாக நந்தி,
பர்மாகமம் ஆகியவைகளை உருவாகியுள்ளனர்.
வைணவ பெரியார்கள் திருவாய்மொழி பாடல்களுக்கு விரிவுரையும், வியாக்கியானங்களையும் கிரந்த எழுத்துக்களாலேயே எழுதி இருக்கிறார்கள்
சோழர்கள் காலத்தில் சோழ அரசர்கள் கிரந்த எழுத்துக்களிலேயே தம் சாசனகளை எழுதுதி உள்ளனர்.










(ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜ ராஜதேவர்க்கு)
“கோப்பரகேசரி பநராத உடையார்
@
ஸ்ரீ ராஜெ@த) தேவர்க்கு
யாண்டு ஙகூ ஆவது
ராஜெ@த) சிங்க வள நாட்டு பொய்கை

நாட்டு திருவையாற்றுத்
தென் கயிலாயமுடையார் கோயிலில்
ஆடவல்லார்க்கு”
என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு 3 ஆவது
ராஜேந்திர சிங்க வளநாட்டு பொய்கை
நாட்டு திருவையாற்றுத்
தென் கயிலாயமுடையார் கோயில் ஆடவல்லார்க்கு”
என்பது பொருளாகும்.
இவ்வெழுத்து முறை கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை வழக்கில இருந்துள்ளது. அதற்கு பின் தோன்றிய இயலம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமலேழகர், ஆகியோர் தம் உரையில் இவ்வித எழுத்துக்கள் இல்லை. கால மாறுபாட்டால் இவ்வெழுத்து முறை மறைந்தது

சதுர எழுத்துக்கள்

நேர் கோடுகள், வட்ட எழுத்து முறை, ஆகியவை மறைந்து சதுர எழுத்துக்கள் தோன்றின.கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின்னர் சதுரம் சதுரமாக எழுதும் முறை தோன்றியது. தற்போது நாம் எழுதும் எழுத்துக்கள் சதுர எழுத்துக்கள் ஆகும் மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை “.!.” நேர் கோட்டால் எழுதப்பெற்றது.பின்னர் பல மாறுதல்கள் ஏற்பட்டு ஈ என்று சதுர வடிவமைப்பு பெற்றது.
தமிழில் மெய்யெழுத்துக்களுக்குத்தான் புள்ளிகள் உண்டு
க் ங் ச் ஞ்- மெய் எழுத்து
அ ஆ இ ஈ= உயிர் எழுத்து
க ங ச ஞ –உயிர் மெய் எழுத்து
குறில், நெடில் என்பதனை வரி வடிவத்தில் குறுக்கியும், நெட்டெழுத்துக்களை
வரி வடிவில் நீட்டியும் எழுதினர்.
அ இ, உ எ -குறில்
ஆ, ஈ. ஊ, ஏ –நெடில்
ஆனால் அக்காலத்தில் எ,ஒ, இவைகளை நெடிலாகவும் வரி வடிவத்தில்
. .
எ ஒ என்று மேலே புள்ளி வைத்து குறிலாகவும் எழுதி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கல் நகருக்கு அண்மையில் ஆண்டி பட்டியில் 120 காசுகள் கிடைத்தன. நடுவே “எ” இவ்வாறு எழுத்தின் நடுவே புள்ளி வைத்து குறிலாக எழுதப்பட்டுள்ளது. இவற்றின் காலம் 2 ம் நூற்றாண்டாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமா முனிவரின் காலம் வரை இவ்வழக்கம் இருந்து வந்தது. அவர்தான் இவ்வழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் புள்ளியை வைத்து உயிர் எழுத்துக்களுக்கு புள்ளி இல்லாத நிலையை உருவாக்கினார்.
எ, ஒ, மேல் இருந்த புள்ளியை நீக்கி விட்டு அவற்றை குறில் எனவும் அதன் வரி வடிவத்தை சிறிது நீட்டி ஏ ஓ என்று அதனை நெடில் ஆகவும் ஆக்கினார்.
இவற்றையே உயிர் மெய்யெழுத்துக்களிலும் உருவாகினார்
.
கெ – குறில்
கெ – நெடில்
இதை மாற்றி
கெ-குறில்
கே –நெடில் என்றார். இதனை வீரமா முனிவர் சீர்திருத்தம் என்பர்

மெய்யெழுத்துக்கள்

“மெய்யி நியற்கை புள்ளியொடு நிலையல்” எபதால் மெய்யெழுத்துக்கெல்லாம் புள்ளி உண்டு என்கிறார் தொல்காப்பியர். இன்றும் இம்முறையே உள்ளது. ஆயினும் ப், ம், இவை இரண்டும் வேறு வேறு ஒலிகள், வேறு வேறு வடிவங்கள், ஆனால் பண்டைய காலத்தில் “ம” வுக்கு
வரி வடிவம் இல்லை “ப” இடையில் ஒரு புள்ளியை போட்டால் “ம” வாக கொண்டனர். இதைத்தான் தொல்காப்பியர்
“உட்பெறு புள்ளி உருவா கும்மே” எனக்கூறினார். திருக்குறளே இங்கனமே எழுதப்பட்டு:ள்ளதாக தெரிவிக்கிறது.

உயிர் மெய்யெழுத்துக்கள்

வேங்கை நாடு என்பதற்கு “கை” இப்படி எழுதுகின்றோம் பழங்கால கல்வெட்டில் வெங் உடன் இரண்டு கொம்புகள் போடப்பட்டுள்ளதுஇதை கூட்டெழுத்தாக கொள்ளலாம்.
பண்டைத்தமிழ் உயிரெழுத்துக்களில் ஓள இல்லை, பதினோரு உயிரெழுத்துக்கள்தான் உள்ளன.ஆய்த எழுத்து இல்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் மேனாட்டு பாதிரிமார்கள் தமிழ்நாட்டிற்கு வந்த் பொழுது அச்சுப்பொறிகளும் வந்தன. கிறித்துவ மொழிகளை பரப்ப இயேசுவின் மொழிகளை அச்சடித்து பரப்பினர் அப்பொழுது எழுத்துக்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பெரியார் எழுத்து
பெரியார் ஈ.வெ. இராமசாமி 1934 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்களில் மாற்றத்தை கொண்டு வந்தார். தான் நடத்திய “விடுதலை” என்ற நாளிதழில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தார்.
1978ம் ஆண்டு கீழ்க்கண்ட எழுத்துக்கள் மாறலாம் என்று அரசு தெரிவித்த்து.

ஐ - அய்
ஓள- அவ்
னை,லை, ளை, ணை, ணொ, ணோ, றொ,றோ, ளொ,ளோ, என்ற மாற்றங்களை கொண்டு வந்த்து.

முடிவுரைக்காக
முதன் முதலில் தமிழ் மொழியின் எழுத்துக்கள் எங்கனம் இருந்த்து என்பதை அரிதியிட்டு கூற முடியாது. மொழி மாறவேயில்லை, எழுத்துக்களின் வரி வடிவங்கள் மட்டுமே மாறிக்கொண்டே உள்ளன. கால வெள்ளத்தில் வடிவங்கள் மாறுவது இயல்பே. இப்பொழுது கணிணினுக்கு தக்கவாறு எழுத்துக்கள் மாறவில்லையா? அது போல அறிவியல் வளர்ச்சியும் கூட எழுத்துக்களின் வடிவங்களை மாற்றிக்கொள்ள ஒரு கருவியாக கூட இருக்க கூடும்.


இந் நூல் ஆசிரியரின் சிறப்புக்கள்

முன்னாள் தமிழகத்துறை தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
அவரின் பிற நூல்கள்

கல்லூரி தமிழ் இலக்கணம்
மனோன்மணியம் பதிப்பு
மனோன்மணீயக் கட்டுரைகள்
சேக்கிழாரின் இலக்கியத்திறன்
பெரிய புராணம் காட்டும் பண்பாடு
அற நூல்
சேறும் செந்தாமரையும்
புதிய தமிழ்
வட இந்தியா- கண்டதும், கேட்டதும்,
ஒரு பெண்ணின் கண்ணீர் கடிதங்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Nov-17, 10:55 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 973

மேலே