தேடுகிறேன் உன்னை

ஜடைபோடும் வயதினில்
கண்ஜாடை காட்டுகிறாய்
காதலென்று வந்தால்மட்டும்
மனக்கதவைப் பூட்டுகிறாய் !

நடமாடும் சிலையென்று
பின்தொடர்ந்தேன் உன்னை
சிலையல்ல அழகுக்கலையென்று
மூடிக்கொண்டேன் கண்ணை !

இயலாதநிலையிலும் என்மீது
உன்பார்வை விழவேண்டும்
காந்தவிசையால் உயிர்
மீண்டுமொருமுறை எழவேண்டும் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (20-Nov-17, 1:26 pm)
பார்வை : 1333

மேலே