தோல்வியே வெற்றிக்கு முதல் படி
நான்,
பல முறை தோற்ற போதெல்லாம்
என்னை கேலி செய்தவர்கள் பலர் ;
அதை கண்ட போது
என் கண்ணில் இருந்து வழியும்
கண்ணீரை துடைக்க இருந்ததோ
ஒரு சில கரங்கள் மட்டுமே !
அந்த தடைகளையும் தாண்டி
வெற்றியை கண்ட போது
கேலி செய்தவர்களின் கரங்கள்
இணைந்து வெற்றி ஓசையை
எழுப்பிய போது
என் கண்களில்
இருந்து வழிந்த கண்ணீரை
துடைக்க ஆயரம் கரங்கள்
இருந்தும்
எனது கண்ணீரை
நிறுத்த முடியவில்லை !!!!!!!