சிறியோரை மேம்படுத்துவோம்

யார் சிறியார்
எனச் சொல்கின்றார் பாரதியார்
இளம் வயதில் துடிப்பவன் அல்ல
ஏழை வயிற்றில் அடிப்பவன் சிறியவன்
துரு துருவென கலையான வாண்டு
சிறியவன் அல்ல
திரு திருவென விழித்து
பிறர் பொருளை களவாண்டு
நிற்பவன் சிறியவன்
உயரம் குறைந்தவன் இல்லை
பிறர்க்கு துயரம் நிரைத்தவன் சிறியவன்
உருவம் மெலிதானவன் அல்ல சிறியவன்
உரு அகம் மலிவானவன் சிறியவன்
சிறியோரை மேம்படுத்துவோம்
பாதி உடல் படைத்தவன் அல்ல
ஜாதி உடல் படைத்தவன் சிறியவன்
எந்த யானையும் மதம்
பிடித்து மசூதி இடிப்பதில்லை
மனிதனைப்போல்
எந்த ஜோதியும் நெருப்பின்றி
ஊரை எரிப்பதில்லை
ஜாதியைப்போல்
அரண்மனை மண்ணைத் தின்பவன் சிறியவன்
நம் நாட்டில்
பிறன்மனை பெண்ணைத் தின்பவன் பெரியவன்
அறத்துப்பால் குடிப்பவன் சிரியவனல்ல
ஒரு மரத்துக்கள் குடிப்பவன் சிறியவன்
நம்மை மண்ணனடிமை செய்த
வெள்ளையன் சிறியவனல்ல
நம் மண்ணிலேயே
பெண்ணடிமை செய்பவன் சிறியவன்
பிள்ளைச்சட்டை அணிபவன் சிறியவன்
நம் நாட்டில்
வெள்ளைச்சட்டை அணிபவன் பெரியவன்
பணம் இல்லாதவன் வறியவன்
அதை இல்லாதோருக்கு
கொடுக்க மனம் இல்லாதவன் சிறியவன்
இத்தனை சிறியோர்களையும்
மேம்படுத்துவோம்
சமூகத்தைப் பண்படுத்துவோம் ..