ஆதரிசம் நீ
இயற்கை எழுதும் கவிதையில் இளவேனில் தோட்டம்
செயற்கை எழுதும் கவிதையில் துணைக்கோள் கூட்டம்
மௌனம் எழுதும் கவிதையில் மலர்களின் ஆட்டம்
மங்கையுன் மௌனப்புன்னகை என்கவிதைக்கு ஆதரிசம்
இயற்கை எழுதும் கவிதைபூந் தோட்டம்
செயற்கை எழுதும் கவிதுணைக் கோள்கூட்டம்
மௌனம் எழுதும் கவிமல ராட்டமாம்
நானெழுத ஆதரிசம் நீ