உண்மையான காதல் பிரிவதில்லை

" இன்னைக்கு அவகிட்ட எப்படியாவது பேசிட வேண்டும். "

என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டான் ஜெகன்..

" காலையிலேயே எங்கடா கிளம்பிட்ட? "

அம்மாவின் குரல் கேட்கிறது அடுப்படியிலிருந்து..

" எங்க போகப் போறான்? கழுத கெட்டா குட்டிச் சுவரு. "

அப்பாவின் பதில் எரிச்சலூட்டியது..
இருந்தாலும் அது அவனுக்கு ஒன்றும் புதியதில்லை..

வேகமாக வீட்டைவிட்டு வெளியேறியவன், வீட்டுக்கு முன் இருந்த கூண்டில் புறாகளுக்கு தீனி போட்டான்..

" இன்னிக்கு அவகிட்ட நான் பேச போறேன். அவ என்னை ஏத்துக்கிடுவாளா? கோபப்படுவாளா?
முதலில் பேசுவாளா? "

புறாகளிடம் தன் மன சம்சயங்களைப் பற்றி சம்பஜனை செய்தான்..
புறாகளுக்குத் தெரியும், அவன் அவளை எவ்வளவு நேசிக்கிறானென்று..

" நீ போய் அவளிடம் பேசு. நீ போய் அவளிடம் பேசு. "

அவை சப்தமிட்டன..

மிதிவண்டியை முடுக்கிக் கொண்டு தெருமுனைக்கு வந்தான்..

தோழிகள் புடைசூழ அந்த பேரழகி வலம் வந்தாள்..

" என்ன அழகுடா! "

வியந்து நின்றான் ஜெகன்.

அப்போழுது ஒரு தெரு நாய் வந்து அவனை மின்கம்பம் என்று நினைத்து சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றது.
அதுகூட தெரியாமல் அவள் அழகில் வியந்து நின்றான் ஜெகன்.

காகம் ஒன்று வந்து அவனைச் சிலையென்று நினைத்து தலையில் எச்சமிட்டுச் சென்றது.

அதைக் கண்டு அவள் சிரித்தாள்.

" ஹேய் ஜெனி! அவனைப் பார்த்தீயாடி? சரியான மாக்கானா இருப்பான் போல. அசடு வழியுது. "

தோழிகளின் கல்லாய்ப்பில் அவள் மேலும் சிரித்தாள்..

தன்னைத் தான் கேலி செய்கிறார்கள் என்பதை அறிந்த ஜெகனுக்கு ஒரே வெட்கமாகிவிட்டது..

உலகில் நாட்டுக்காக படையெடுத்த மன்னர்களுக்கு மத்தியில் இந்த ஜெகன் அந்த அழகிய வஞ்சியின் அன்புக்காக அதிகமாக படையெடுத்தவன், படையெடுக்கிறவன் என்றே வரலாற்றில் பொறிக்க வேண்டும்..

உண்மையில் அவளுக்கு அவனை யாரென்றே தெரியாது.
அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வான்,
அவளிடம் பேச வேண்டுமென..
அவனுடைய படையெடுப்பு ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்துவிடும்.

இருப்பினும் தளராது படையெடுப்பான்.

ஜெனிபரின் கண்களுக்கு அவன் மட்டும் அகப்படவில்லை..
காரணம், அவள் வேறு ஒருவனை விரும்பினாள்.
அவன் பெயர் ஆதி.
பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்..
நிதம் ஒரு காரில் வலம் வருவான்.

ஜெனிபரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
நினைத்ததையெல்லாம் வாங்கிக் கொள்வாள்..

இது ஜெகனுக்கு ஒருநாள் தெரிந்தது.

ஆதியும், ஜெனிபரும் ஒன்றாக ஊர் சுற்றும் போது கண்டான்.
ஆனாலும் அவளை அவனால் வெறுக்க முடியவில்லை.

அவளைத் துரத்திலிருந்து பார்ப்பதையே வழக்கமாக்கிக் கொண்டான்..

இப்படியே நாட்கள் நகர்கையில் ஒருநாள் ஆதி வேறு பெண்ணோடு ஊர்சுற்றுவதைக் கண்டான்..

பார்க்கச் சகிக்க முடியாத அளவிற்கு பொது இடங்களில் அவர்கள் நடந்து கொண்ட முறை அமைந்திருந்தது.

அதை ஜெனிபரிடம் சொல்ல நினைத்தான்.

அவளைத் தேடிப் போனான்.
ஆனாலும் அவனால் சொல்ல முடியவில்லை.
ஆதலால், ஒரு கடிதத்தில் எழுதி அவளுடைய கைப்பையில் போட்டான் அவளுக்குத் தெரியாமல்...

வீட்டிற்குச் சென்றவள் அதை எடுத்துப் படித்தாள்.
ஆனால், நம்பவில்லை.
ஒருநாள் அவளே நேரில் கண்டாள்.
அதன் பிறகே நம்பினாள்.

" நீ என்னை உண்மையாக நேசிக்கவில்லையா? "

ஆதியிடம் போய் கேட்டாள்.

" நான் இப்படி தான். உனக்காக எல்லாம் என்னை மாத்திக்க முடியாது. "

ஆதி அதற்கு மேல் பேசவில்லை.
அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான்.

ஜெனிபர் அப்படியே சோர்ந்து போய் கீழே முட்டிப்போட்டு கதறி அழுதாள்..

அதைப் பார்த்துக் கொண்டிருக்க ஜெகனால் இயலவில்லை.

வேகமாக அவள் அருகில் சென்றான்..

" ஹேய்! ஏன் அழுற?! "

என்றான் சிறு புன்னகையுடன்.

" நான் அழுதா உனக்கென்ன? எதுக்கோ அழுறேன்? நீ உன் வேலைய பார்த்துப் போ. "

என்றாள் ஜெனி கோபமாக..

" எப்படி போக முடியும் நீ இப்படி அழும் போது உன்னை விட்டு? "

என்று சொல்லிக் கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்தான் ஜெகன்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.

" நான் உன்னிடம் ரொம்ப நாளா ஒன்று கேட்கனும்னு நினைச்சேன். இப்போ கேட்கலாமா? "

என்று கேட்டான் ஜெகன்.

" என்ன? சொல்லு. "

ஜெனி கேட்க குழந்தை போல் ஆர்வமாகிறாள்.

" உனக்கு புறா பிடிக்குமா? "

" ம்ம். பிடிக்கும். ஜோடி புறாக்கள் என்றால் நம்பப் பிடிக்கும். "

தன் கொண்டு வந்த தோள்ப்பையைத் திறந்தான் ஜெகன்.

" எதுக்கு கேட்ட? "
ஜெனி கேட்டாள்.

" உன் கண்களை மூடிக்கொள். "

" எதுக்கு? "

" மூடிக்கொள். "

" ம்ம். சரி. மூடிக்கிட்டேன். "

ஜெகன் தோள்ப்பையில் இருந்து ஒரு கூண்டை எடுத்தான்.
அதில் ஒரு ஜோடி புறாகள் இருந்தன.

" இப்போ, கண்ணைத் திற. "
என்றவாறு ஜெனியிடம் காட்டினான்.

" வாவ்! அழகான ஜோடி புறாக்கள். நல்லா இருக்கு. "

ஜெனியின் சிரிப்பில், ஜெகனுக்கு ஒரே குஷி..

புறாகளைப் பார்த்துக் கொண்டே இருந்த ஜெனி, " இவற்றை நான் வைத்துக் கொள்ளலாமா? ".
என்றாள்..

" ம்ம். இவற்றை உனக்காகத் தான் கொண்டு வந்தேன். "

" எனக்காகவா? "

" ம்ம். சரி. நான் கிளம்புறேன். "
என்று கூறிவிட்டு ஜெகன் நகர முற்பட்டான்..

" ஹேய்! உன் பெயரென்ன? சொல்லாமல் போற.. "

" உன் வீட்டுக்குப் போய் இந்த ஜோடி புறாக்களிடம் கேளு. அவை சொல்லும். "

என்றவன் மகிழ்ச்சியாக வீடு நோக்கி வந்தான்..

ஜெனியும் வீட்டுக்கு வந்தாள்.

தன் அம்மா, அப்பாவிடம் புறாக்களைக் காட்டி அதை தான் வளர்க்க அனுமதி கேட்டாள்.

அவர்களும் சரியென்று சம்மதித்தார்கள்..

தன் அறைக்குச் சென்றவள், புறாக்களிடம், " அவன் பெயர் என்ன? " என்றாள்.

கூண்டுக்குள் இருந்த சிறிய மறைப்புக்குள் இருந்த சீட்டை எடுத்து அவளிடம் கொடுத்தது புறா.

அதை விரித்துப் பார்த்தாள்.
அதில், " ஜெகன் ", என்று எழுதப்பட்டிருந்தது..

அவள் யோசித்துப் பார்த்தாள்.

பலதடவை அவள் ஜெகனைப் பார்த்தது ஞாபகம் வருகிறது.

அவள் எங்கெல்லாம் சென்றிருந்தாலோ அங்கெல்லாம் ஜெகன் இருந்திருக்கிறான் என்பது அவளுக்கு இப்போ தான் புரிகிறது.

இருந்தாலும் சந்தேகம்.

" சரி, நாளை அவனிடமே கேட்கலாம். " , என்று நினைத்தாள்.

" அப்படியானால் எங்கு போய் அவனைச் சந்திப்பது? ", என்ற குழப்பம் வர, தூங்கிப் போனாள்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Dec-17, 8:51 pm)
பார்வை : 726

மேலே