இதய அஞ்சலி

இதய அஞ்சலி

அம்மா , இயந்திரமாய் சுழன்று மக்களின்
இதயத்துடிப்பில் வாழ்ந்த
இரும்பு பெண்மணி !!
இன்னல்கள் களைந்து தமிழகத்தின்
இல்லங்களில் ஒளி கூட்டியவள் !!

மக்கள் நலனிலே சமரசம் கொண்டிடாது
மதயானை போல் திமிராய்
மத்திய அரசுக்கு மதில்சுவருக் கட்டியவள் !!
மண்ணின் மைந்தர்கள் மதித்து நடந்திடவே
மண்டியிட வைத்திட்ட மாபெரும் சக்தியவள் !!
மதிக்கொண்டு தீட்டிடும் தொலைநோக்கு திட்டங்களால்
மகிழ்வித்த தலைவி அவள் !!
மடிக்கணினி பல தந்து
மாற்று அரசியலை வித்திட்ட முதல்வி அவள் !!

அரசின் செயல்பாட்டில் சில அழுக்குகள் இருந்தாலும்
அன்னை உந்தன் சொல்லில் அழுத்தங்கள் இருந்தனவே !!!
அண்டை மாநிலமும் அஞ்சி நடுங்கிட
அனலாய் நின்று காத்திட்டாள் !!
அநீதி என நினைத்தால் அரங்கங்கள் அதிரிடவே
அரசின் அறைகூவல் ஒலிதந்து
அவள் அகந்தைக்கு அழகு சேர்த்திட்டாள் !!

இவள் இல்லாத தமிழகமும்
கண்ணீரில் தத்தளிக்க
இயற்கையும்சேர்ந்துக்கொண்டு
மழைநீரால் அஞ்சலி செய்கிறதே !!

வருங்கால தமிழகத்தின் மாற்றங்கள்
எங்கள் வாழ்வை உயர்த்திடவே
வான்நின்று காத்திடுவாய் !!
வாழ்வாங்கு வாழ்ந்த பெண்ணினமே !!!

- திவ்யா சத்யப்ரகாஷ்
செம்பாக்கம் , சென்னை .

எழுதியவர் : திவ்யா சத்ய பிரகாஷ் (5-Dec-17, 12:12 pm)
Tanglish : ithaya anjali
பார்வை : 14546

மேலே