ஆப்புவைத்தார் தொல்காப்பியா

யாப்புதான் சாரா கவிதை தனைக்கொண்டு
தூப்புக்கட் டையினால் தூசிதட்டு கின்றனர்
காப்பு இனியேது நற்றமிழ்ச் சொற்கவிக்கு
ஆப்புவைத்தார் தொல்காப் பியா !

கவிதை ---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா வடிவம் .

தொல்காப்பியர் : தமிழ் மொழி உருவாக்கிய அகத்தியரின் சீடர் .
கவிதைக்கு யாப்பு அல்லது இலக்கண வடிவம் அமைத்த தமிழ்ப் பெருந்தகை .
ஐம்பெரும் நிலமும் எழுவகைத் திணையும் கொண்டு தமிழர் நாகரிகத்திற்கு
கவிசெய்த சான்றோன் தொல்காப்பியன் .

குமரிக் கண்டத்தில் நிலை பெற்றிருந்த முதலிரு தமிழ்ச் சங்கங்கள்
கடற்கோளில் அழிந்த பின் தப்பிக் கிடைத்த ஒரே தமிழ் நூல் தொல்காப்பியம்
என்பர் தமிழ் ஆய்வாளர்கள் .
கடற்கோள் கொண்ட போதும் தொலையாத தொல்காப்பிய வழியை
நாம் கவனிப்பின்றி காப்பின்றி தொலைத்துவிடக் கூடாது .

நற்றமிழ் யாப்புக் கவிக்கு ஆப்பு (தடை ) வைக்காமல் நாமும் நலம் செய்வோம்
என்பதே கவிதையின் நோக்கம் .

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-17, 9:17 am)
பார்வை : 57

மேலே