தமிழரின் தற்கால சரித்திரம்
தமிழரின் தற்கால சரித்திரம்
வெண்பா நாற்பது
சரியாய் இருபதாண்டு காங்ரஸ் வரிந்து
பரிபாலித் தார்ராஜ கோபால் ---- தறிக்கெடா
மக்களைத் தக்கபடிக் காத்திடக் காமராஜர்
பக்தவச்ச லம்ஆண்டா ரு (1)
காசிச்சென் றாயுன்கர் மம்தொலைக்கக் காசிலாது
காசியில்பூ நூலுடனும் மீசையுடன் -- ஓசிச்சோற்
கேட்டுநீசத் ரம்நுழைய வாயில்பார்ப் பான்தள்ளல்
காட்டாய் மனதுநின்ற து (2)
காங்ரஸில் காசாளர் அங்கீகா ரம்தந்தார்
காங்ரஸ்உன் னைவிரட்டிற் றாஐயோ !!! ---- தாங்காத்
தனிக்கட்சிப் பார்ப்பனனை வஞ்சிக்க எண்ணி
பணத்துடனா ரம்பித்தீ ரு (3)
கேரளப்போ ராட்டத்தால் ஏராளப் பேருதான்
கேரளப்பட் டம்உன்ன வர்கொடுத்தார் ---- பாருநீ
வேலையில்லா அண்ணாவை சேர்த்தாய்ப் பணியிலே
பாலில் திராவிடநஞ் சு (4)
வெள்ளையன் சொன்னத் திராவிடம் கள்தேனாய்
கள்ளமாய்பு குந்தது நம்மிலே ---- விள்ளை
எழுபத்தைந் தாண்டாய் எழாச்செய்த வார்த்தைப்
பழுதாம் திராவிடம்சொல் லும் (5)
முப்பத்தே ழில்கம்யூ னிஸ்ட்தடையில் கைப்பாகி
எப்பக்கக் கம்யூனிஸ் டும்தப்பா---- ஒப்பாக்
கழகத்தில் காங்கிரஸில் சேர்ந்த வருமே
வழக்கம்போல் கர்ஜணைச்செய் தார் (6)
கம்யூனிஸ்ட் தாரகம்
அந்தக் கம்யூ னிஸ்ட்தா ரகம்கேள்
அடிமைநோய் பசிப்பிணி எருமைபோல் பொறுப்பதோ
பொருத்ததி னிபோதுமே பொங்கியெ ழுபு றப்படு
தந்திகம் பியறுதண் டவாளம் பெயர்த்திடு (7)
அவன்திராவி டக்கம்யூ னிஸ்ட்டாய் உவந்தே
அவனிவனெ வன்பாரா தேச ---- இவனும்
கழகம் புகுந்து வழக்கமாகிப் பேசக்
கழகமேக்கா ணாக்கலந்தா ராம் (8)
வேலைதேடி யண்ணனுக்கு வேலைதந் தப்பெரியார்
வேலைக்குச் சம்பளம்தந் தார்தவறாப்---- பாலைவிட்டு
அண்ணாத் திராவிடம் சொல்லப் பெரியவரும்
பண்ணென நஞ்சைக்கேட் டார் (9)
பெரியார் விகடர் பெரியசொத்துத் தேடப்
பெருந்தொகை மக்களேத் தந்தார் ---- பெரியார்
பலபலசொத் துக்கள் மளமள வென்று
பலகோடி யாக்கிப்பார்த் தார் (10)
அண்ணா வருமானம் அண்ணல்தந் தப்பணமே
அண்ணா சமயம்நோக் கிக்காத்தார் ---- பின்நாளில்
ஆட்சிப் பிடிக்கவேண்டி நாட்டமுடன் தம்பிமார்
ஆட்களுடன் ஆலோசித் தார் (11)
அண்ணாவை முன்னிறுத்தி கண்ணாய்ப் பெரியாரும்
எண்ணற்ற சொத்துக் குவித்தாரே ---- அண்ணா
பெரியாருக் காகமேடை ஏறிசவ டாலாய்ப்
பெரியளவில் கட்சிவளர்த் தார் (12)
நல்வாய்புக் காத்தண்ணா அல்லல் மணியம்மைக்
கல்யாணச் சாக்குகாட்டி நீங்கவும் ---- கொல்லையோடி
அண்ணாவாம் அண்ணாவின் தம்பிகளேக் கூத்தாடிக்
கண்ணீர் துளிப்பசங்க ளாம் (13)
முரட்டுப்பேச் சாலும் துடுக்குப்பேச் சாலும்
தரமற்றக் கட்சி வளர்க்கப் ---- பரபரப்பாய்
நாசிப்பேச் சால்அண்ணாப் பேசியாரம் பித்தகட்சி
ஏசியது மற்ற வரை (14)
சபையிலே மாந்தர் பொறுக்காப்பேச் சொப்பால்
சபையில் தரமில்லா மக்களேக் ---- குப்பையவர்
எப்பேச்சுக் கும்நையாண்டி அப்போதே நக்கலாய்
தப்பா பதில்கொடுத்தா ராம் (15)
பதிலுக்கு மாற்றான் பதில்விளக்கம் சொன்னால்
பதில்ஒரேமே டையில்பே சென்பார் ---- பதிலாக
மேடையில் யாரும் படைச்சொல்லா டக்காணோம்
மேடைவீரம் மேடையிலே தான் (16)
அண்ணாப் புறப்பட்டார் அண்ணா நெருங்கிவிட்டார்
அண்ணா வருவார் அலறல்மைக் -- அண்ணனும்
வந்துவிட்டார் உண்டியலில் தந்திடுவீர் அள்ளிநிதித்
தந்திடும்தா ராளமாய்யென் பர் (17)
இப்படித்தான் காசுவசூல் இப்பையில்கா ரில்வந்து
தப்பாப் படிப்பணம் பெற்றார்கள் ---- அப்போ
கலவைகறிச் சோறுதங்கல் எல்லாம் வசூலில்
கலையாம் சுருட்டல்மீ தி (18)
ஆசிரியப்பா
உண்மையில் மக்கள் காசில் உயர்ந்தார்
பேச்சிலே மயக்கி பேச்சிலே உயர்ந்தார்
பேச்சைக் கேட்டமக் களுக்கென் செய்தார்
தன்மையி லாது நடப்பது ஏனாம்?
அரசியல் சாசனத் துளைஅவன் போட்டான்
அரசிய லிலிங்கிவர் தாழ்ந்தவரை ஏற்றினர்
அரசிய லிலிங்கிவரால் பிறசாதி அழிந்தது
அரசியல் அறியா மக்கள்
தரமிலாக் கேலிகா தலென்று அழிந்தாரு (19)
இலாவணி
புதுமையாய் பெரியார் பொதுவுட மைபேச
குதூகல மாயவரிடம் சேர்ந்தார்ஓடி ஓடி
ஒதுங்க விடம்தேடி பதுங்கியப் படித்தவரில்
புதுஅண் ணாக்கண் டார்தேடித் தேடி (20)
ஆங்கில நாளிதழை நடத்தவும் அண்ணாவை
ஆங்கே யமர்த்தினார் பெரியாரு யாரு
தாங்கியந்த பத்திரிக்கை அண்ணா ஓங்கவே
பாங்குடன் நடத்திட்டார் பாரு பாரு (21)
பெரியார்க் கெத்தனை எடுபிடிகள் தெரியுமா
பெரிதாய் எண்ணவே ணுமதற்கு அதற்கு
நெறியாய் தந்தாரு சம்பளம் பெரியாரு
அறியவர்க் குபிடிக்கா சொல்லெதற்கு எதற்கு (22)
வெண்பா
ஒன்றே குலம்தேவன் ஒன்றென்ற மூலரைப்
பின்பற்றி அண்ணாக் கதைத்தாரே ---- நன்றிதுப்
போதுமென மக்கள் அவரையும் நாதியின்றிப்
பாதுகாவ லன்எனத்தேர்ந் தார் (23)
அண்ணாப் படியரிசி ரூபாய்க்கு ஆண்டொன்றில்
என்றபடி போட்டாரில் லைக்கேளு ---- அண்ணா
எலிக்கறிச் சாப்பிடச் சொல்ல நலிந்தார்
கலிக்கப்பின் வாங்கிச்சென் றார் (24)
எல்லாப்பேச் சாளிகளும் கள்ளமிலா மக்களிடம்
பல்லிளித்து வாங்கினக் காசிலேக் ---- கல்லாவைக்
கட்டிக்கா ரில்வந்துப் பேசி யுணவருந்திக்
கட்டிலுறங் கிப்பின்போ வார் (25)
ஞாயிறுதோ றும்ஊரில் ஞாயிறுதோ றும்மீட்டிங்
ஞாயமாய் யுண்டியல்கு லுக்குவர் ---- ஞாலத்தில்
யாருமில்லைத் தோழர்போல் தாரும் நிதியென்று
யாசகம் துண்டுண்டி யல் (26)
அண்ணா விடம்திராவி டம்வினவச் சொன்னாராம்
அன்னைபார தத்தொடைமேல் தொப்புள்கீழ் ---- என்றுசொல்லி
பாரதத்தா யைப்பழித்தார் பாதகமாய் பின்னங்கு
யார்த்திராவி டத்தைப்பார்ப் பார் (27)
காங்ரஸ்ஆ ளக்கழகம் தாங்காத் தவித்தது
பாங்காய்த் தகுதியின் றித்தவித்தார் ---- தாங்களும்
தாழ்த்தப்பட் டோர்விலையு யர்வுயிந்தி எழ்மைகாட்டி
பாழ்படுத்தி னர்மக்க ளை (28)
நடுவனோட்டை யாலே மிடுக்கானார்த் தாழ்ந்தோர்
தடுப்பாரி லாமாநி லங்கள் ---- அடுப்பூதித்
தூண்டிவளர்த் தார்அவரை மற்றவர் ஆண்டியாக
நோண்டியெடுக் கின்றார்கீ ழோர் (29)
நயந்தநடு மக்கள் உயர்ந்தவர் என்றுக்
கயவர் நினைக்கின்றார் உண்மை ---- கயவரவர்
முன்நிலைம றந்துகோமான் என்றபடி பேசுகிறார்
தன்மானம் முன்னமேபோ யிற்று (30)
உயர்ந்தமக் கள்புரமோட் டச்சதிந டத்தும்
கயவரவர் நாம்தமிழ ராம்கேள் --- உயர்ந்தோரில்
தாழ்ந்தோர் கலந்துசாதி யற்றசாதி வேண்டுமாம்
தாழ்ந்தோர் நினைப்பும் கனவு (31)
வைக்கத்தின் வீரராம் வெண்தாடி வைத்தவேந்தர்
வைத்தபட்டம் தந்தைப் பெரியாரே ---- வைக்காதப்
பட்டம் அறிவுப் பகலவன்நீ பட்டத்தைத்
தட்டிடாச் சிந்தனைச்சிற் பி (32)
காஞ்சிபுரத் துக்கரிபால் டித்தெற்கின் காந்தியாம்
தீஞ்சொல்லிங் கர்சால் அறிஞராம் ---- காஞ்சிரமாய்
மூடிமறைத் தார்முதலி ராமலஷ்மண் நாடியே
பாடு கிறார்பல்ல வி (33)
வெள்ளையன் காலத்தில் கள்ள மிலாமுதலி
உள்ளல் இராமலட்சு மண்முதலி ---- ஒள்ளாம்
உயர்தமிழ் நாட்டின் வியத்தகும் எல்லா
உயர்பட்டங் கள்பெற்ற வர் (34)
உலகின் இரண்டாம் தலைசிறந்தத் மேதை
உலப்பும் இராதா கிருஷ்ணன் ---- புலங்களுள்
மிக்க ஜனாதிபதி திக்கற்றுப் போனாரே
தக்கார் அவரேயாம் பார் (35)
செய்தஆ ராய்ச்சியெது பட்டமும் ஏனுனக்கு
கொய்யக் கிடைத்தப்பட் டங்களும் ---- பொய்யே
கழகம் மறைத்தல் பழக்கம் விடலும்
வழக்கமானச் செய்கையான து (36)
உம்பட்ட மிப்படி நம்மறிஞர் பட்டமோ
எம்மட்டும் சர்வகலா சாலைபட்டம் ---- சும்மா
அடைமொழியில் நல்லறிஞர் கொள்ளார் மயக்கம்
படையு மிலையறிஞர்க் கு (37)
கவிஞராம் கண்ணதாசன் ஈவிகேசம் பத்தும்
தவித்தார் கழகத் திலிவர் --- கவிஞரும்
சம்பத்தும் வேண்டாக் கலைஞரின் சம்பந்தம்
தம்மிஷ்ட மாய்ப்போனா ரு (38)
அண்ணாப் பெரியாரைக் கண்ணென ஏத்தியதும்
அண்ணாவைக் டாக்டர் உயர்த்திட ---- அண்ணாவைத்
தம்பிமறந் தாரென்றுத் தம்பியாம் எம்ஜியார்
தம்கொடியில் அண்ணாவைத் தாரு (39)
எம்ஜியாருக் குப்பின்னே அம்மா வரவும்தான்
எம்ஜியார் போதை அதிகமாகி ---- எம்ஜியார்
தெய்வம் புரட்சியென்று செய்திச் சிலைபலச்
செய்துவீதி யில்வைத்தா ரு (40)
சுதந்திரம் வந்தும் உதறிவிட்டார் நாட்டை
சிதறி உருண்டது ஆண்டுப் ---- பதறாதே
பத்திரண்டு ஆண்டிலே ஆட்சியேச் சொத்தென்று
எத்தரும்வந் தாராட்சிக் கு (41)
கொய்தபூவை மாலைகட்டித் தந்தாராம் மந்தியிடம்
பிய்த்ததை வீசியதாம் மந்தியும் ---- பொய்யில்லை
கொய்தகொய்யா வையெவனோ எய்யப் பறித்தவன்
வாய்ஜொள்ளு விட்டக்க தை (42)
எழுபதாண்டில் கண்டார் கொழுத்தப் பெரியார்
பழுத்தக் கலைஞருடன் அம்மைப் ---- பழுதிலா
ஆட்சியில் கீழோரும் ஆட்டம்போட் டாடுகிறார்
ஆட்சியைந டத்துவேனென் று (43)
ஐம்பதாண் டுக்கழக வம்பாட்சி ஆளுக்காள்
ஜம்பத்தைக் கண்டதே மிச்சமாம் ---- வம்பாய்
கலாச்சா ரமழித்தார் தாழ்வுயர்வுச் சொல்லி
துலாக்கோல் இவர்கேன்கை யில் (44)
வீரரும் பேடியாக வீரமிலான் ரௌடியாக
பாரிக்க மக்கள் கலங்குகிறார் ---- பாரீர்
கலாச்சாரம் ஊட்டக் கலித்தாரை நீயும்
பலானவரைக் கண்டுடன்நீக் கு (45)
வரலாற்று ஆதா ரமிலா வராதே
வரலாறு இல்லை உளறல் ---- வரலாற்
படைத்தவர் அஞ்சார் படைகள் வரினும்
நடைக்கட்டி வேறுகதைச் சொல் (46)
டாக்டர்பட் டம்பெற நோக்கமிலாப் பேசுகிறார்
டாக்டர்வி யாசமெலாம் செய்தியாகா ---- பாட்டர்
குறிப்பிருந்தால் சொல்வேண்டாம் சொந்தக் குறிப்பு
மறுப்பின்றி வாயையும்மூ டு (47)
நம்அகத்தி யர்சொன்னார் அம்மட்டில் ஞானகாவ்யம்
உம்பௌத்த ரும்இமயத் திற்கப்பால் ---- வம்பிலா
ஞானகாவ்யம் ஐந்நூறில் ஞாயமாய் ஓட்டினாராம்
ஞானசூன்யம் தேவையற்ற து (48)