இளமையின் மேவிய வினைகள்

வருகைதரும்
ஒவ்வொரு குறுந்தகவலிலும்
புதிய அழைப்புகளில்
நீ வருவாயென....
கணித புள்ளியின்
மைய இழையில்
நின் வாசனை
வீசாதோ?
என் எண்ணங்களை பாரடி
எப்படித்தான்
இவன் சுவாசிப்பது?
என்னோடு வா..!
மந்திரத்தில் சிறகுகள் செய்து
குதிரையேரி
இலக்குகளும் இலக்கணமமும்
இல்லா வானுலகில்
ஊர்கோலம் செய்வோம்...!
இந்த கண்ணனில்லா?
பாற்கடல் மேனியில்
இளமையின்
மேவிய வினைகளை
காதலில்லா
முற்றுப்புள்ளியில் சேர்ந்துவிடாதே!

எழுதியவர் : சுரேஷ் குமார் (11-Dec-17, 11:18 pm)
பார்வை : 74

மேலே