இணையத்தின் விளைவுகள்

இணையம் என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிப்பதாகும். இந்த இணையம் மனிதர்களின் உற்றத் தோழனாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இந்நவீன உலகில் பாலமாய் இருப்பது இணையமே ஆகும் என்றால் மிகையாகாது. அந்த இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும்.

ஆக கல்வி, தொழிற்துறை, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளாதரம், சமூகம் என அனைத்து துறைகளிலும் இந்த இணையத்தின் ‘மாயமும் மகிமையும்’ தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய சான்று நம் கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்திய pembelajaran maya. தற்போது, இனையத்தின் வழி மாணவர்கள் இல்லத்தில் இருந்தவாறே, பாடத்தை ஒட்டிக் கலந்துரையாடலோ, கருத்துப்பரிமாற்றமோ செய்யலாம். இவ்வாறு கற்க முயலும் மாணவர்கள் கல்வியில் புடமிட்ட வைரமாய் பிரகாசிப்பர் என்பது திண்ணமாகும்.

இதுமட்டுமின்றி, இணையத்தின் உதவியால் பல மருத்துவ சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ வல்லூனர்கள் இந்த முறையை கையாளுகின்றனர். இதற்குச் சான்று அண்மையில் இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் வழி பிரசவம் நடைப்பெற்றதைக் குறிக்கலாம் மேலும், 'இன்டெர்நெட்' எனப்படும் இணையத்தின் வரவு நம் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. விரல் நுனியில் தகவல்கள், செய்திகள், புள்ளிவிவரங்கள்; விரல் சொடுக்கும் நேரத்தில் தகவல், செய்திப் பரிமாற்றம், தரவிறக்கம்: பதிவேற்றம்; பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்துபோய் 'எல்லையில்லா உலக' உருவாக்கம்; தொலைவு என்பது மறைந்து போய், உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப்போன அதிசயம்! அதற்கு முக்கியச் சான்று எம்.எச் 17, ஏர் ஆசியா விமானம் கண்டுப்பிடிக்க இந்த இணையத்தின் பயன்பாட்டினை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தொடர்ந்து, இணையத்தின் ஆதிக்கம் மக்களின் அன்றாட வாழ்விலும் மேலோங்கியே நிற்கின்றது. இன்றைய பரபரப்பான வாழ்வில் மக்கள் நேரத்தை சிக்கனப்படுத்துவதிலும், வேலைகளை எளிமையாக;விரைவாக முடிப்பதிலும் குறியாக இருக்கின்றனர். அந்த வகையில், கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது என அத்துனை வேலைகளையும் விரல் சொடுகும் நொடியில் முடித்து விடலாம். இந்த நேரத்தில் காலத்தேவனின் தேவை அதிகம் நமக்குத் தேவையில்லையே எனலாம். மேலும், அடையாள அட்டை, கடைப்பிதழ் அட்டை, வங்கி அட்டை என ஒவ்வொரு மனிதனின் முக்கிய பத்திரங்கள் மற்றும் அட்டைகள் செய்ய இணையம் மிக அவசியம்.

இப்படி பல நன்மைகளை வாரி வழங்கும் பாரி வள்ளரான இணையத்தினால் கெடுதல்களும் விளைகின்றன என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். இணையத்தின் மிகப் பெரும் சிக்கலே நம்பகத்தன்மை இன்மதான். சொல்வதைச் சரியாகப் பிழையில்லாமல் சொல்வது மட்டுமல்லாமல் தக்க சான்றுகளையும் காட்ட வேண்டும். இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். அதனால், பல வகைகளில் தனி மனிதருக்கும் மற்றும் ஒரு நாட்டிற்கும் பிரச்சணைகள் வந்துக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இதற்கு தக்கச்சான்று, வாத்ஸஆப், முகப்புத்தகம் இன்னும் பல. தொடர்ந்து, இணையத்தில் வன்முறை சம்பவங்கள் அளவுக்கு அதிகமாக பெருகெடுத்து வருகின்றன.

மின்னியல் திருடர்கள், இணையம் மூலம் வங்கிக் கொள்ளை, நாட்டின் ரகசியங்களத் திருடுதல், இணையம் மூலம் வைரஸ் பரப்புதல் என தீய வழிகளிலும் தன் செல்வாக்கை வளர்த்துள்ளது இணையம். இதற்கு தக்க சான்று, நம் நாட்டின் வலையகம் இணைய hacker முடக்கப்பட்டது. அவையோரே, கத்தியின் கூர்மையை பழம் நறுக்கவும் பயன்படுத்தப்படுகிறது; ஒருவரை காயம் விளைவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக இது கத்தியின் தவறு இல்லை, அதனைப் பயன்படுத்துவோரின் கையில் உள்ளது. ஆகவே கற்றறிந்த மானிடராகிய நாம் அன்னப் பறவையாய் உருமாறி இணையத்திலிருந்து நல்லதைப் பருகி அல்லதை ஒதுக்கி பயன் அடைவோம். இதுகாறும் என் உரையை செவிமடுத்த உங்களுக்கு நன்றி கூறி விடைப்பெறுகிறேன். நன்றி வணக்கம்.

எழுதியவர் : (14-Dec-17, 5:02 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 14103

சிறந்த கட்டுரைகள்

மேலே