கல்லூரிக் காலம் - சி எம் ஜேசு
அது ஒரு இனிய துவக்கம்
பசி மறந்த வயிற்றுடன் பருவ வயது துவக்கத்தில்
ஸா எது பா எது என்றஅறியாத காலத்தில்
சிந்தை முழுதும் நிறைந்து இருந்த
எந்தை இறைவனின் சொந்த மகனாகவே
உள்ளே நுழைந்தேன்
வருமா இந்த இசை
தீருமா திறன்களின் தாகம் என
ஏக்கமுற்று ஊக்கம் பிறந்த அந்த நேரத்தில்
காத்திருந்த நேர்க்கானல் கடிதம் கிடைக்க
காற்றாய் பறந்து மனம் இசை நாற்றாய் நிமிர்ந்தது
வித்தைகள் நிறைந்த இந்த இடம்
சொந்தமில்லா இணை துணை தோழர்கள் உடன்
முதலில் கேட்ட நாதஸ்வரமும் அதனோடு இணைந்த தவிலும்
கன்னத்தில் ஒட்டிய அன்னையின் புடவையாய்
அமுத கானத்தை இழுத்து செவிக்குள் தள்ளியது
வர வர நடந்து வர வர நாவின்றெழுந்த சுரங்கள்
யாழ் இசைந்து இசைத்த வீணையின் கீர்த்தனங்கள்
ஜதி நிறைந்த நாட்டியம் கூட்டிசையாய் ஒலித்த தாளங்கள் என
அரையறையாய் இசையின் பேரின்ப சப்த்தங்கள்
நுரைநுரையாய் பொங்கி நெஞ்சை மகிழச் செய்தது
தொடரும் ....