மனித ஜாதியின் காலம்
மனித ஜாதியின் காலம்
மனிதர்கள் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்வது இன்று நேற்றல்ல உலகம் தோன்றியதிலிருந்தே தொன்று தொட்டு வருகிறது . மாமுனியும் ரிஷியுமான அகத்தியர் உலகம் தோன்றியது முதலே இருக்கிறார் இன்றும் வாழ்ந்து வருகிறார் என்பர். விஷயஞானம் உள்ளவர்கள். அவர்கள் பிறந்த காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல யாராலும் முடியாது. நம் தமிழ்க்கடவுள் கந்தன் முருகவேள் காலத்திலேயே வாழ்ந்தவர். முருகவேள் கேட்டுக்கொள்ள அகத்தியர் தமிழ் மொழியை உண்டாக்கினாராம். சித்தர்கள் ஒருவர்க்கொருவர் மற்ற சித்தர்களின் ஜாதிகளை தங்கள் வாகடங்களில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள்; அகத்தியர் வேளிர் என்னும் வெள்ளாளர் குலமாம். மற்றவர்களைப் பற்றி அகத்தியர் அமுத கலைஞானம் 1200 ல் பாடல்கள் 218 219 சில சித்தர்களின் ஜாதி குலத்தை குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.
அகத்தியர் பாடல்கள் 218 219ம்
கட்டினான் கொங்கணவன் பளிங்கசாதி
காவியமாய் வெகு நூல்கள் சுருதினானே
கருதினான் சட்டை முனி அனந்தங்கோடி
கருவாக அவன்குலம்த்தான் சேனியனாகும்
உருதியுள்ள போகணுமே குசவனாகும்
ஓகோகோ அவன் பாடலுக்கு இலக்கோயில்லை
பருதியுள்ள சந்திரனோ ரெட்டியாமே
பக்குவமாய் முன்பின்னாய் பாடிப்போட்டான்
அருமையுள்ள மச்சமுனி என்னசொல்வேன்
அவன்குலந்தான் செம்படவனா குந்தானே
மானானக் கமலமுனி கன்னானாகும்
மாராட்டமா கவேப் பாடிப்போட்டான்
ஊனான இடைக்காட்ட னிடையனாகும்
உண்மையில்லாக் கல்விகளை உரைத்தானப்பா
தேனான நந்தியுமே பிரம்மகுலமப்பா
திறமாக வெகுமறைப்பாய் பாடினானே
அகத்தியர், நந்திதேவன், போகர், முதல் மச்சமுனி இன்னும் மற்ற
சித்தர்கள் வரை இன்ன ஜாதியென்று குறிப்பிட்டுக் கொள்வதென்பது
சகஜமாகவே இருந்துள்ளது. அப்போது தொழிலை வைத்துதான் ஜாதியைக்
குறிப்பிட்டுள்ளார்கள் யென்பதும் அகத்தியர் பாடலிலிருந்துத் தெரிகிறது.
அகத்தியரை வெள்ளாளர் என்கிற வேளிர் குலம் என்று மற்றவர்கள் சொல்லியுள்ளப் பாடல்களும் காணக்கிடைக்கிறது.
ராஜப் பழம் நீ (17.12.2017)