உன் ஒற்றை புன்னகைக்கு ஈடாகுமா
பிறந்த குழந்தையின்
பிஞ்சுப் பாதம்
தவழும் குழந்தையின்
தத்தை மொழி
பூவின் இதழில்
முத்தமிடும் பட்டாம்பூச்சி
மழையின் பிள்ளையாய்
பிறந்த வானவில்
குடைக்கு வெளியே மழை
குடிக்க தேநீர்
மழை ஓய்ந்த வெயிலில்
தலைதுவட்டும் மரங்கள்
அம்மாவின் மடியில்
அயர்ந்த தூக்கம்
இரவின் தனீமையில்
இளையராஜா இசை
பௌர்ணமி நிலவு
படிக்க வைரமுத்து கவிதை
படித்த கேள்விகள் நிறைந்த
பரீட்சை வினாத்தாள்
ஆசையாய் நான் வளர்த்த
ரோஜாச்செடியின் முதல் மொட்டு
இதுவரை நான் ரசித்த
இத்தனை அழகுகளையும்
மொத்தம் சேர்த்தும்
உன் ஒற்றை புன்னகைக்கு
ஈடாகவில்லையடி....!!!