முதல்பிள்ளையடி நான்

துடிக்கும் இதயத்தில்
அன்பை ஊற்றி
காதலை அடைந்தேன்
துடிப்பாக உனைமாற்றி

விரல்கள் அத்தனையும்
பசுமை தென்னங்கீற்று
புன்னகையின் சங்கீதம்
அறுவடையான நெல்நாற்று

அழகான பாவையே
என்தேவை உன்பார்வையே
கவிதைகள் என்பது
நீபேசும் வார்த்தைகளே

குழந்தையோடு விளையாட
சேலையின் முந்தானை
நிலையாகநின்ற சிந்தையில்
காதலித்தநாள்முதல் உன்சிந்தனை

உன்னோடு நடக்ககிறேன்
நடைபாதையில் மௌனமாக
என்னை ஏந்திச்செல்வாயா
என் அன்னையின்குணமாக

தோளுக்கு மேல்வளர்ந்த
முதல்பிள்ளை நானடி
என்னைப் பெற்றெடுக்காத
முதல்அன்னை நீயடி !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (17-Dec-17, 8:41 pm)
பார்வை : 279

மேலே